பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ல் பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

வெட்கித் தலைகுனிய நிற்கின்றேன். நீயோ விரைந்து வந்து உலகம் எல்லாம் காணும்படிக் குத்துவாய் என்கின்றாய்" என்பது இராவணன் பேச்சு.

அடுத்து அநுமன் மிக்க ஆரவாரத்துடன் தேரில் விரைந்து ஏறி கண் முழுதும் தீப்பொறிகள் பறக்க, கவசத்துடனே உடல் பொடிபட்டுச் சிந்தும்படி தன் வயிரம் போன்ற கையினால் விசையாகத் தன் முழுவலிமையையும் பயன்படுத்திக் குத்துகின்றான். அநுமனுடைய கைக்குத்து பட்டவுடன் அவனது மார்பில் புதைந்திருந்த திக்கயங்களின் தந்தங்கள் அவன் புகழ் சிந்தியதைப் போல் முதுகு வழியாகச் சிந்துகின்றன. இராவணனும் உயிர்தப்பின வன் போன்று உணர்வற்று மீண்டும் உணர்வு பெறுகின்றான். பெற்றவன், பெருமூச்செறிந்து அநுமன் முன்சென்று, "வீரனே, வலி என்பது உன்னிடத்தில் தான் உள்ளது. உன்னைக் நோக்குமிடத்து பிறவீரர்கள் அலிகளே. நான்முகனே என் எதிர்நின்று நீ சலிப்பாய்' என்று சொன்னாலும், சலியாத நான் மெலிவு என்பதனை உன்னால் அறிந்தேன். இனி, நீ என்னை வென்றவனே யானாய்'. இப்போது நான் யுகாந்த காலத்தில் விழுகின்ற பேரிடிபோல என்னுடைய ஒரு கையால் குத்துவேன். அப்போது நின் உயிர் நிலைத்திருக்கப் பெற்றால், நீ என்றும் நிலைத்திருப்பவனாவாய் உனக்கு வேறொரு பகையும் இல்லை” என்கின்றான்.

அடுத்து அநுமன் இராவணன் எதிரேசென்று, "என் குத்தினால் உயிர் ஒழிந்து விடாமல் எதிர்நின்று பேசினாயாதலால் என்னைநீ வென்றவனே யாவாய்” என்று இராவணனைக் கொண்டாடி அவன் எதிரே சென்று 'உன் கடனைப் பெற்றுக் கொள்க’ என்று தன் விசாலமானமார்பைக் காட்டுகின்றான். இப்போது