பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகோதர வாஞ்சை 43

வந்து கொண்டிருந்த பரதன் தொலைவிலுள்ளபோது அவனது கல்லாடை கண்ணுக்குப் புலனாகின்றது. இன்னும் சற்று நெருங்கி வரும்போது அவனுடைய மாசடைந்த உடல் தென்படுகின்றது, மேலும் நெருங்கும்போது, நகையிழந்த முகம் கண்ணுக்குப் புலனாகின்றது. இன்னும் சற்று நெருங்கும்போது அவன் படும் துயரம் முகத்தில் பளிச்சிடுகின்றது. இங்கனம் பரதனது முழுவடிவத்தையும் கண்டதும் போர்க் கோலத்திலிருந்த குகனின் கையிலிருந்த வில் நழுவிக் கீழே விழுகின்றது; மனம் கலங்கி செயலற்று நிற்கின்றான்.

இப்பாடலை அநுபவிக்கும் நமக்கு இதே காட்சியை நல்கும் முத்தொள்ளாயிரப் பாடல் ஒன்று நினைவிற்கு வருகின்றது.

கொடிபாடித் தேர்பாடிக்

கொய்தண்டார் மாறன் முடிபாடி முத்தாரம்

பாடித் தொடிஉலக்கை கைம்மனையில் ஒச்சப்

பெறுவெனோ? யானும்ஒர் அம்மனைக் காவல்

உளேன்'.

என்பது. இச்செறிப்பால் அல்லலுறும் பெண் ஒருத்தியின் கூற்றாக வருவது. பாண்டியனைக் காதலுறும் இவள் அவன் மீது உலக்கைப்பாட்டு பாட விழைகின்றாள். கற்பனையில பாண்டியன் தேரில் வருவதைக் காண்கின்றாள். தொலைவில் வரும் தேரின் கொடியை முதலில் காண்கின்றாள். தேர் நெருங்கி வரும்போது தேர் கண்ணுக்குப் புலனாகின்றது. மேலும் அது நெருங்கும்

24. முத்தொள்ளாயிரம் - 93 டி.கே.சி. பதிப்பு)