பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

இந்திரசித்தின் மனத்தைப் பாதிக்கவில்லை. பாதிக்கப் பட்டதாகக் கம்பன்காட்டவில்லை; அதுபற்றிப் பாடல்களே இல்லை. இவன் மாற்றாந்தாயின் வயிற்றுப் பிள்ளைதானே என்று அதிகமாகத் துக்கப்படவில்லையோ? இதனால்தான் கம்பனும் பாடாமல் விட்டானோ? என்ற ஐயம் நம்பால் எழுகின்றது. இதனை நாம் சிந்திக்க வேண்டும்.

இராவணனின் சகோதர வாஞ்சை இராமன் கணையால் கும்பகருணன் இறந்து படுகின்றாான். இச் செய்தியைத் தூதுவர் மூலம் கேட்ட இராவணன்,

பாரொடும் பொருந்தி நின்ற

மராமரம். பனைக ளோடும்

வேரொடும் பறிந்து மண்மேல்

வீழ்வதே போல வீழ்ந்தான்".

இவன் தம்பியின்மீது கொண்ட பாசத்தால், அண்டத்தின் மேல் முகடு எட்டும் அளவு வாய்விட்டு அரற்றுகின்றான்" 'தம்பியே, இந்திரனது பெயர் எங்கும் பொறிக்கப் படாதவாறு அவன் மேன்மையைக் கெடுத்தாய். இந்திரன் முதலியோரை வென்ற பராக்கிரமசாலி என்று பெயர் பெற்ற உன்னை ஒரு மனிதன் கொன்றான் என்ற தீமொழியைக் கேட்கும் நிலை ஏற்பட்டு விட்டதே! உனக்கு ஆபத்து நேர்ந்த காலத்தில் உன்னைக் கிட்டியிருந்து வேண்டிய உதவியைச் செய்ய வேண்டியது என்கடமையாக இருக்க, அது செய்யாமல் என் உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றேனே! இனி இந்திரனுக்கும் குளிர் விட்டுச் சுவர்க்கலோகத்தை ஆளச்சென்று விடுவான். மூத்தவனான உடன் பிறந்தவன் இருக்க, இளையவன் இறந்து விட்டான் என்றநிலை ஏற்படுமானால், சகோதரன் வேண்டும் என்ற எண்ணமே உலகத்தில் போய் விடாதோ?

50. யுத்த. மாயாசனகப் - 75 61. மேற்படி - 78-87