பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

"இளைய பெருமாளை ரீகுகப் பெருமாள் அதிசங்கை பண்ண, இருவரையும் அதிசங்கை ೬r ரீகுகப் பெருமாள் பரிகரம் பெருமாளை நோக்கிற்றிறே"

(அதிசங்கை - ஐயம்; பரிகரம் - சேனை; பெருமாளை இராமபிரானை,

"ஒருநாள் முகத்திலே விழித்தவர்களை வடிவழகு படுத்தும் பாடாயிற்று இது". என்பவை ரீவசன பூஷணத்தின் வாக்கியங்கள்

முதல் வாக்கியத்திற்கு வியாக்கியானம் வகுக்கு மிடத்து மணவாளமாமுனிகள் "எம்பெருமானுடைய அழகு யாரையும் மங்களாசாசனத்தில் மூட்டும் என்னும் இடத்திற்கு இன்னும் ஒர் எடுத்துக் காட்டு தருகின்றார் "இளைய பெருமாளை என்று தொடங்கி; சிருங்கி பேரத்திலே எழுந்தருளி பூரீகுகப்பெருமாளை அங்கீகரித்த அன்று, பாங்கு அறிந்து இளைய பெருமாள் படுத்துக் கொடுத்த இலைப்படுக்கையிலே பெருமாளும் பிராட்டியும் பள்ளி கொண்டருளா திற்க, இளமைப்பருவம் முதலே மிக்க அன்பினையுடையவராகையாலே 'என் வருகின்றதோ ! என்று அஞ்சி, முதுகில் இட்ட அம்பறாத்துாணியும் கட்டியவிரற்சரடும் நாண் ஏறிட்டு நடுக்கோத்துப் பிடித்த வில்லும் தாமுமாய் நடையாடும் மதில் போலே வளைய வருகின்ற இளைய பெருமாளைக் கண்டு, பூரீகுகப் பெருமாள், "ஒரு தம்பி தாயைக் கொண்டு இராச்சியத்தை வாங்கிக்கட்டின காப்போடே காட்டிலே தள்ளிவிட்டான்; இவனும் அவனைப் போன்று ஒரு தம்பியன்றோ? தனியிடத்தில் என்னசெய்ய இப்படி ஆயத்தமாய் நிற்கின்றான்?" என்று தெரியாது என்று ஐயம் கொண்டு,

8. ரீவச. பூஷ - 251 9. மேற்படி - 252 |புருடோத்தம நாயுடு பதிப்பு