பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட் பண்புகள் ? 85

ஆண்டு.அவள் அன்பின் ஏத்தி

அமுதுஇழி அருவிக் கண்ணள் மாண்டது.என் மாயப் பாசம்;

வந்தது வரம்பில் கலம் பூண்டமா தவத்தின் செல்வம்;

ப்ோயது பிறவி என்பாள்"

என்று கூறிக் கொண்டு பழங்களை வழங்கி விருந்து செய்கின்றாள். ஏட்டுப்படியிலுள்ள ஒரு பாடல் இதனை விவரமாகத் தெரிவிக்கின்றது.

மாங்கனி தாழை யின்காய்

வாழையின் கணிகளோடும் ஆய்கனி ஆவதே என்று அருந்திநான்

விரும்பி வைத்தேன் பாங்கினி அமுதுசெய்மின் என்றவள்

பரிவில் நல்கும் தேங்கனி இனிதின் உண்டு

திருவுளம் மகிழ்ந்த வீரன்

என்பது பாடல். பின்னர் சவரி இராமனைப் புகழ்கின்றாள்; இராமனும் முகமன் கூறுவான்.

இருந்தனன் எந்தை நீஈண்டு

எய்துதி என்னும் தன்மை பொருந்திட இன்று நான்என்

புண்ணியம் பூத்தது என்ன, அருந்தவத்து அரசி தன்னை

அன்புற நோக்கி எங்கள் வருந்துறு துயரம் தீர்த்தாய் 萃 அம்மனை வாழி என்றான்”

40. ஆரணிய - சபரி பிறப்பு நீங்கு - 3 41. மேற்படி - 5