பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா பார்த்துட்டு, மருந்து எழுதிக் கொடுத்துட்டு போய்ட்டாரு...' மருந்து வாங்க ஏதுடா பணம்? - எப்படியோ சமாளிச்சுக்கிட்டேன்பா! என் கிட்ட கொஞ்சம் ரூபாய் இருந்தது. சீக்கிரம் வாங்க! அம்மாவுக்கு சீக்கிரம் தரலேன்னா, அம்மாவை பார்க்கவே முடியாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு. வாங்கப் பா... நான் கூப்பிடுறது காதில விழுதா? கு.கா...வா அந்தக் கடைவரைக்கும் போயிட்டு உடனே போகலாம். ராமன் ஒரு கடைக்குப் போய் அங்கிருந்த தொலை பேசியில் போலிஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்து, தன் எசமான் வீட்டில் மோதிரம் காணமல் போனதைக் குறிப்பிட்டு ரிப்போர்ட் செய்தான். பிறகு, மகனை அழைத்துக் கொண்டு தன் எசமான் வீட்டை நோக்கி நடந்தான். - குகன் எவ்வளவோ திமுறியும் அவன் விடவில்லை. - எசமான் திருடனைப் பிடிச்சுட்டேன் எசமான் இதோ இந்தப் பய தாங்க, உங்க