பக்கம்:பதினாறும் பெறுக.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18

i8

பாட்டு-ஆதி தாளம்.

எடுப்பு

இருவரும்: ஆடுவமே பள்ளுப் பாடுவமே-இனி

அச்சமில்லை இன்ப நிலை தேடுவமே-நாம் (ஆடு}

தொடுப்பு

தலைவன்: நாடு முழுதும் வளம் கொழிக்குதடா-இங்கு

நல்ல தமிழ்க் கலைகள் செழிக்குதடா பீடு நிறை காதல் இனிக்குதடா-மனம் பேரின்பம் காண்பதில் துடிக்குதடா-நாம் (ஆடு)

தலைவி காதல் மணம் புரிய அனுமதித்தார்-பெற்று

கருத்தோடு வளர்த்தவர் வாழவிடுத்தார் சாதலைவென்று புகழ் பெறுவதற்கே-குறள் சார்ந்திட்ட வாழ்வினி வருமெனக்கே-நாம் (ஆடு)

பாட்டு-வேறு-அடதாளம்.

தலைவன் கருத்து முடிந்தது காதலும் வென்றது

கருதுவாய்-பக்கம் வருகுவாய் அடுத்து நிகழ்வது அழகி மணமடி அதனையே-கொஞ்சம் நினைகுவாய்

தலைவி பெற்றவர் ஒப்பினர் பெருமை கிடைத்தது

பேணுவோம்-இன்பம்-காணுவோம் கற்றவர் வாழ்ந்திடக் கற்புடை வாழ்வினைக் காட்டுவோம்-புகழ்-ஈட்டுவோம்

(இருவரும் தழுவுகின்றனர். முத்தன் ரசிக்கிறான். செல்வ ரங்கம் ஆத்திரத்தோடு எழுந்து உட்காருகிறார். கையில் மலர் மாலைகளோடு பெருமகள் வருகிறாள்.)

பெருமகள் .

பாட்டு-சிந்து-பேகம்

காதலித்துக் களவியல் புரிந்தீர்-தமிழ்

கற்பியலின் வாசலிலே நுழைந்தீர்-இன்பச் சோதனையில் முத்தமிழாய்

வாழ்கவென வாழ்த்துகிறேன் வளமாய்-வாழ்க-நலமாய்

2. மாலையிட்டு மனமொன்றிக் கூடுவீர்-குறள்

மாண்பு நிறை நற்குடியைக் காணுவீர்-காதல் சோலையிலே பதினாறு

பேறுகளும் பெற்றுயர்ந்து

வாழ்வீர்-நலம்-சூழ்வீர்!

(மாலைகளைக் கொடுக்க தலைவனும் தலைவியும் மாலைமாற்றிக்கொண்டு பெருமகளை வணங்குகின்றனர்.)