பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷ்ணு புராணம் 101 வீட்டை விட்டுப் புறப்படுமுன் வீட்டின் தலைவன், தெய்வம், மலர், ஆபரணம், நெய் அல்லது மதிக்கத் தகுந்த ஒருவர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பார்த்துவிட்டுப் புறப்பட வேண்டும். நாட்டிலும், காட்டிலும் நடக்கும் பொழுது கையில் ஒரு தடிக் கொம்புடனும், காலில் செருப்புடனும் நடக்க வேண்டும். ஒருவன் உண்மையே பேச வேண்டும். அந்த உண்மை பேசுவதால் பிறருக்குத் தீங்கு உண்டாகும் என்ற நிலை வந்தால் பேசாமல் இருக்க வேண்டும். மகன், மகள் ஆகியோர் திருமணம், புதுமனை புகுதல், குழந்தைகட்குப் பெயர் சூட்டல், முதன்முறையாகப் பிறந்த சிசுவைப் பார்த்தல் ஆகியவை நிகழும் பொழுது அவ்வவற் றிற்குரிய சடங்குகளைச் செய்ய வேண்டும். ஒருவர் இறந்த பொழுது ஒற்றைப் படை எண்ணுள்ள பிராமணர்களுக்குச் சாதாரண உணவு படைத்தால், பிதுர்கள் ஒரு மாதத்திற்கும் மீன் விருந்து கொடுத்தால், இரண்டு மாதத்திற்கும் முயல் கறி கொடுத்தால், மூன்று மாதத்திற்கும் பறவைக் கறி தந்தால், நான்கு மாதத்திற்கும் பன்றிக் கறி கொடுத்தால், ஐந்து மாதத்திற்கும் ஆட்டுக் கறி கொடுத்தால், ஆறு மாதத்திற்கும் மான் கறி கொடுத்தால், ஏழு மாதத்திற்கும் சிறப்பான மான் கறி தந்தால், எட்டு மாதத்திற்கும் கயல் இறைச்சி தந்தால், ஒன்பது மாதத்திற்கும் வெள்ளாட்டுக் குட்டி கறி கொடுத்தால், பத்து மாதத்திற்கும் மாட்டுக்கறி கொடுத்தால், பதினோரு மாதத்திற்கும் குறிப்பிட்ட பறவையின் இறைச்சி கொடுத்தால், கால முழுவதற்கும் திருப்தி அடைவார்கள். சிரார்த்தம் செய்வதற்குச் சிறந்த இடம் கைலை என்ற ஊரேயாகும். ககுத்தனின் முன்னோர் மீனுவின் தும்மலில் பிறந்தவன் இட்சவாகு. இட்ச வாகுவின் மகன் விருக்சி. விருக்சிக்கு மிகவும் தைரியம் வாய்ந்த