பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விஷ்ணு புராணம் 123 சமாளிக்க முடியாது என்று கிருஷ்ணன் ஒரு தந்திரம் செய்தான். பல காலம் கோட்டைக்குள்ளிருந்தே போர் தொடுக்கக்கூடிய இடமாக சமுத்திரத்தின் நடுவே துவாரகை' என்னுமிடத்தை ஸ்தாபித்தான். அங்கே யாதவர்களை வைத்து விட்டுக் காலயவனனைச் சந்தித்தான். ஆனால் அவனைச் சட்டைசெய்யாமல் மேலே நடந்து சென்றதால் காலயவனனும் இவனைப் பின்தொடர்ந்தான். திடீரென்று ஒர் இருண்ட குகை எதிர்ப்பட கிருஷ்ணன் அதனுள் நுழைந்து விட்டான். உள்ளே தேவாசுர யுத்தத்தில் ஈடுபட்டு தேவர்களுக்கு உதவியாக அசுரர்களை வென்றுவிட்டு குகையில் உறங்கிக் கொண் டிருந்தான் முசுகுந்தன் என்ற மன்னன். கிருஷ்ணன் உள்ளே போனதைப் பார்த்த காலயவனன் குகைக்குள் நுழைந்தான். இருட்டில் ஒன்றும் தெரியாததால் உறங்கிக் கொண்டிருந்த முசுகுந்தனைக் கிருஷ்ணன் என்று நினைத்துக் காலால் எட்டி உதைத்தான். துளக்கத்தில் எழுப்பப்பட்ட முசுகுந்தன் மிக்க கோபம் கொண்டு கண்ணை விழித்தனன். கண்பார்வை பட்டவுடன் காலயவனன் எரிந்து சாம்பலானான். யுத்தத்தில் தங்களுக்கு உதவிய முசுகுந்தனுக்கு தேவர்கள் கொடுத்த வரமாகும் இது. உறக்கத்தில் இருந்து யார் அவனை எழுப்பு கிறார்களோ அவர்கள் எரிந்து சாம்பலாவார்கள் என்பது அவ்வரம். ஜராசந்தன் உறவினனாகிய பீஷ்மகா தன் மகள் ருக்மணியைச் சிசுபாலனுக்கு மணமுடிக்க விரும்பினான். திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது கிருஷ்ணன் ருக்மணியைத் தூக்கிச் சென்றுவிட்டார். போர் தொடுத்தவர்களையெல்லாம் பலராமன் வென்று விட்டான். ருக்மணியின் சகோதரனாகிய 'ருக்மி கிருஷ்ணனை வெல்லாமல் நாடு திரும்புவதில்லை என்று வஞ்சினம் கூறிக் கிருஷ்ணனை எதிர்த்தான். தோற்றுவிட்டபடியால் தன்