பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வாயு புராணம் 147 'கவலை வேண்டாம். இந்த நதி, இந்த விளக்கில் உள்ள சுடர், சம்பங்கிப்பூ பக்கத்தில் நிற்கின்ற பசு ஆகிய நான்கும் இது நடந்தது என்பதற்கு சான்று கூறும், என்று கூறி மறைந்து விட்டது. சற்று நேரத்தில் இராம, இலக்குவர்கள் திரும்பினார்கள். சீதாவை நோக்கி. “விரைவாக சமையல் செய். உச்சிப் பொழுதிற்குள் சிரார்த்தச் சடங்கு செய்ய வேண்டும்” என்றனர். சீதை, அது தேவையில்லை. சடங்கு நடந்து முடிந்து விட்டது என்று கூறி, நடந்ததை விவரமாகச் சொன்னாள். சகோதரர்கள் அதைச் சிறிதளவும் நம்பாமல், மறுபடியும் சமையல் செய்யச் செய்து தர்ப்பணத்திற்குப் போவதற்கு முன் அவள் கூறிய சாட்சிகளை அழைத்து, “நடந்ததை நடந்தபடி கூறச் சொல்” என்றார்கள். சீதையும் முறைப்படி இந்த நான்கையும் ஒவ்வொன்றாக வரவழைத்தாள். அந்த நான்கும் ஒன்றும் நடைபெறவில்லை என்று பொய்ச்சான்று கூறின. இராம இலக்குவர்கள் சமைத்த உணவை எடுத்துக் கொண்டு காட்டிற்குச் சென்று சிரார்த்தச் சடங்கை ஆரம்பித்தனர். இப்போது தசரதன் அசரீரியாய்ப் பேசத் துவங்கினான். "மகனே! மருமகள் அளித்த பிண்டத்தை ஏற்றுக் கொண்டு நான் திருப்தி அடைந்து விட்டேன். மறுபடி எதற்காக என்னை அழைக்கிறாய்?" என்று கூறியவுடன் இராம, இலக்குவர்கள், "இது உண்மை என்றால் ஏன் ஆறு, பசு, விளக்கு பூ என்பவை சான்று பகரவில்லை?” என்று தசரதனைக் கேட்டனர். தசரதன் “இன்னும் சந்தேகம் இருந்தால் சூரியனைக் கேள்" என்றான். இராமன் சூரியனைக் கேட்க அவனும் நடந்ததை ஒப்புக் கொண்டு சான்று பகர்ந்தான். சகோதரர்கள் இருவரும் சீதையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். அவள் கற்பின் திண்மையைப் போற்றிப் புகழ்ந்தார்கள். இந்த நான்கின் மேலும் சினம் கொண்ட சீதை பால்கு நதியைச் சபித்து