பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#74 பதினெண் புராணங்கள் வேண்டும் என்று அழுதது. உபமன்யுவின் தாய் பால் போன்ற ஒரு பொருளைக் கொடுத்தாள். குழந்தை அதைச் சாப்பிட்டுப் பார்த்துத் தந்தையிடம் சென்று இது பாலில்லை. பாலின் ருசி இதிலில்லை என்று அடம் பிடித்தது. அப்போது உபமன்யுவின் தாய் 'நானோ வறுமையில் வாடுகிறேன். பாலுக்கு எங்கே போவது? நான் அரிசிக் கஞ்சிதான் உனக்குத் தந்தேன்' என்றார். உடமன்யு சிவனை நோக்கித் தவம் செய்து பாலைப் பெறப் போகிறேன் என்றார். அவன் தாய் சிவனைக் குறித்துத் தவம் செய்ய ஒரு மந்திரத்தையும், ஆபத்து நேர்ந்தால் காத்துக் கொள்ள அகோராஸ்திர மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்து அனுப்பினாள். இமயமலையில் ஒரு பகுதிக்குள் சென்று உபமன்யு தவத்தைத் தொடங்கினான். அரக்கர்களும், அசுரர்களும் எவ்வளவு முயன்றும் அவன் தவத்தைக் கலைக்க முடியவில்லை. இறுதியில் அவனைச் சோதனை செய்வதற்காகச் சிவன், இந்திரன் வடிவம் எடுத்துக் கொண்டு அவன் முன் தோன்றினார். உடமன்யு கண்விழித்துப் பார்த்து, தேவர்கள் தலைவனே! என்னை நாடி வந்ததில் பெருமகிழ்ச்சி என்றான். தேவேந்திரனாக வந்தவர், உனக்கு என்ன வேண்டும்? யாரைக் குறித்து நீ கடுந்தவம் செய்கிறாய்?" என்று கேட்டார். உடமன்யு சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்கிறேன் என்றான். அதைக்கேட்ட இந்திரன், சிவபிரானா, அவன் ஒன்றுக்கும் உபயோகமில்லாத பயித்தியம், அவனைக் குறித்து ஏன் தவம் செய்ய வேண்டும்? என்றார். அவர் சிவன் என்று அறியாத உடமன்யு மிக்க கொடியதாகிய அகோராஸ்திர மந்திரத்தைப் பயன்படுத்திவிட்டான். அது சிவனுடைய அஸ்திரம் ஆதலால் உடன் வந்த நந்தி அதை ஏற்றுக் கொண்டார். சிவன் தன் வடிவத்தைக் காட்டிப் பல மந்திரங் களையும் உபதேசித்துப் பாலுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும் வரத்தையும் தந்தார்.