பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 203 நோக்கி விதுரன் பேசுவதைப் பார்த்துக் கோபம் கொண்ட துரியோதனன் அறிவை இழந்த நிலையில் பின்வருமாறு பேசினான்: ‘'வேலைக்காரியின் மகனே! எங்கள் உப்பைத் தின்றுவிட்டுப் பாண்டவர்கள் பக்கமே உன் அன்பு இருக்கிறது. உன்னை இங்கு வைத்திருப்பதே தவறாகும்" என்று விதுரனின் மனம் புண்படப் பேசினான். துரியோதனன் எல்லை மீறிவிட்ட நிலையில் திருதராஷ்டிரன் அவனை ஒன்றும் சொல்லாததால் மனம் ஒடிந்த விதுரன் அஸ்தினாபுரத்திற்கு மீண்டும் வருவதில்லை என்ற சங்கல்பத்துடன் பாரத நாடு முழுவதும் தீர்த்த யாத்திரை என்ற காரணத்தை வைத்துச் சுற்றிவரச் சென்றார். இறுதியாக யமுனை நதியை அடைந்த பொழுது கிருஷ்ணனின் மிக நெருங்கிய நண்பனான உத்தவரைக் கண்டான். கிருஷ்ணனைப் பற்றியும், யாதவரைப் பற்றியும் விசாரித்தார். கிருஷ்ணனுடைய இளமைக் காலத்தை அறிந்தவர் உத்தவர் ஆகையால், விதுரருக்குக் கிருஷ்ணனின் இளமைக் கால லீலைகளைச் சொல்ல ஆரம்பித்தார். உத்தவர், விதுரருக்குக் கூறிய கிருஷ்ணனின் இளமைப் பருவம் ஏற்கெனவே விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அங்கு காணப்படாத பகுதிகளை இங்கு தந்துள்ளோம். வராக அவதாரம் தீர்த்த யாத்திரையில் விதுரர் மைத்ரேயி முனிவரைச் சந்தித்தார். விஷ்ணுவின் அவதாரங்களைப் பற்றி அறிய வேண்டுமென விதுரர் கேட்டபொழுது மைத்ரேயி சொல்லத் துவங்கினார். ஒரு காலத்தில் பூமியைக் கடலுக்கடியில் ஒளித்து வைத்து விட்டார்கள் தைத்திரியர்கள். மனுவும், சத்ரூபனும் பிரம்மாவிடம் வந்து எல்லா இடங்களிலும் நீராக இருக்கிறது. தங்குவதற்கு இடமே இல்லை. பூமியோ கடலுக்கடியில் உள்ளது. என்ன செய்யலாம்?' என்றனர். பிரம்மா இது ஆராய