பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 205 போயினர். அந்த நிலையில் அவர்கள் யார் என்று பிரம்மா சொல்ல ஆரம்பித்தார். “முனிவர்களே! ஒரு காலத்தில் பல முனிவர்கள் விஷ்ணு இருக்கின்ற இடமாகிய வைகுண்டத் திற்குச் சென்றனர். பிரம்ம லோகத்தை விட அழகாக வைகுண்ட லோகம் இருந்ததால் அங்கே வந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்த முனிவர்கள் அவ்வளவு தூரம் வந்து விட்டதால் எப்படியாவது விஷ்ணுவை தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். விஷ்ணுவை தரிசிக்க ஏழு வாயில் களைக் கடந்து செல்ல வேண்டும். முனிவர்கள் ஆறு வாயில் களைச் சுலபமாகக் கடந்து விட்டனர். ஏழாவது வாயிலில் ஜெய, விஜயன் என்ற இருவரும் கதாயுதத்தோடு காவல் புரிந்தனர். எக்காரணம் கொண்டும் முனிவர்கள் உள்ளே போக முடியாது என்று அவர்கள் தடை செய்து விட்டனர். கடுங்கோபம் கொண்ட முனிவர்கள் பூமியில் சென்று அரக்கர்களாகப் பிறப்பீர்கள் என சாபம் இட்டனர். அந்த இருவரும்தான் இரண்யாக்ஷன் என்றும், இரண்யகசிபு என்றும் இரு அரக்கர்களாகத் திதியின் வயிற்றில் தோன்றினர். பூமியை சுருட்டிக் கொண்டு சென்று கடலுக்கடியில் ஒளிந்து பிறகு வராகத்தால் கொல்லப்பட்டவன் இரண்யாக்ஷன். நரசிம்ம அவதாரத்தால் மார்பு பிளக்கப்பட்டு இறந்தவன் பிரகலாதனின் தந்தையாகிய இரண்யகசிபு. கபில அவதாரம் ஒரு காலத்தில் சுவயம்பு மனுவின் மகளாகிய தேவஹ்தியை கர்தமர் என்ற முனிவர் மணந்தார். பதினாயிரம் ஆண்டுகள் சரஸ்வதி நதிக்கரையில், விஷ்ணுவைக் குறித்துத் தவம் இயற்றினார். விஷ்ணு தோன்றி 'உன் மகனாகவே நான் பிறக்கப் போகிறேன்’ என்று கூறினார். இதனிடையே முனிவருக்கும், மனைவி தேவஹ்திக்கும் ஒன்பது பெண்கள்