பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/249

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


220 பதினெண் புராணங்கள் தேவர்களையும் ஒழித்துக் கட்டு என்று துவஷ்டா சொல்ல, விருத்ராசுரன் தைத்திய சேனையோடு புறப்பட்டான். தேவர்கள் எந்தவிதமான ஆயுதத்தைப் பயன்படுத்தினாலும், விருத்ராசுரன் அவை அனைத்தையும் விழுங்கி விட்டான். இந்திரன் முதலிய தேவர்கள் ஒட்டம் பிடித்தனர். இம்முறை தேவர்கள் நேரிடை யாக விஷ்ணுவிடமே சென்று விட்டனர். விஷ்ணுவிடம், 'விருத்ராசுரன் இருக்கும் வரை தேவர்கள் வாழவே முடியாது என்று கூறி முறையிட்டனர். அவர்கள் ஆயுதங்கள் அனைத்தும் பயனற்றுப் போனதையும் விஷ்ணுவிடம் கூறினர். விஷ்ணு, 'ததிச்சி என்ற முனிவர் ஒருவர் இருக்கிறார். மாபெரும் தவசியான அவர் உடம்பிலுள்ள எலும்புகள் பெரும் சக்தி வாய்ந்தவை. அவர் எலும்பைப் பெற்றுப் புதிய ஆயுதம் ஒன்றைத் தயாரித்துக் கொண்டு விருத்ராசுரனுடன் போர் புரிந்தால் வெற்றி காணலாம் என்றார். ததிச்சி முனிவரிடம் ஒடிய தேவர்கள் விஷ்ணு சொன்னதை அப்படியே சொன்னார்கள். மிக்க மகிழ்ச்சியோடு தம் உடலை நீப்பதாகவும், தேவர்கள் அந்த எலும்பை எடுத்துக் கொள்ளலாம் என்றும் ததிச்சி கூறினார். அப்படியே உடலை நீத்தார். விஸ்வகர்மாவின் துணைகொண்டு வஜ்ராயுதம் தயாரிக்கப்பட்டது. புதிய ஆயுதத்துடன் இந்திரன் தேவர் களுடன் போருக்குக் கிளம்பினான். புதிய ஆயுதம் காரணமாக தைத்திய சேனை சிதறலாயிற்று. விருத்ராசுரன், கோழை களாகிய அவர்களை அழைத்து, என்றோ ஒரு நாள் சாகப் போகிறோம். போர்க்களத்தில் இவ்வாறு ஒடுவதால் அவமானம்தான் மிஞ்சும். திரும்பி வாருங்கள் என்று எவ்வளவு சொல்லியும் தைத்திரியர்கள் ஒடிவிட்டனர். விருத்ராசுரன் தனியே போர்க்களத்தில் நின்றான். வஜ்ராயுதத்துடன் ஐராவதத்தில் வந்த இந்திரனைத் தன் கையிலிருந்த சூலாயுதத்