பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/255

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


226 பதினெண் புராணங்கள் ஒளிந்திருந்த ஹயக்ரீவன் என்ற அசுரனைக் கொன்று வேதங்களை மீட்டார்). அம்பரீஷன் கதை அம்பரீஷன் என்ற அரசன் எல்லாச் செல்வங்களும் பெற்று இப்பூவுலகை ஆண்டு வந்தான். பெரிய விஷ்ணு பக்தன் ஆகையால் அவன் ஆட்சியிலும், செல்வத்திலும் சிறிதும் ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தான். வைணவ சமய சம்பந்தமான சடங்குகளைச் செய்வதில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தான். இத்தகைய ஒரு சடங்கில் மூன்று நாட்கள் முழு பட்டினி இருந்து மூன்றாம் இரவு முடிந்தவுடன் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது விதி. இதைச் செய்ய முற்பட்ட அம்பரீஷன் விரதத்தை முடிக்க வேண்டிய நேரத்திற்குச் சற்று முன்னர் துர்வாசர் அங்கு வந்து சேர்ந்தார். அவரை உண்ண அழைத்தான் அம்பரீஷன். இதோ வருகிறேன் என்று சொல்லி, வெளியே சென்றவர் விரதம் முடிக்கும் நேரத்தில் வந்து சேரவில்லை. இரவு முடியும் நேரத்தில் உடனேயே உண்ண வேண்டும் என்பது கட்டளை. ஆனால் வந்த விருந்தினரை, அதிலும் துர்வாசரை விட்டு விட்டுச் சாப்பிடுவது பெரிய அபசாரம். இத் தருமசங்கட நிலையில் மாட்டிக் கொண்ட அம்பரீஷன் இரண்டையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நீரைப் பருகி விரதத்தை முடித்தான். விரத நேரம் கழித்து வந்த துர்வாசர் தன்னை விட்டு விட்டு அவன் நீரைப் பருகினான் என்பதை அறிந்த வுடன் கடுங்கோபம் கொண்டார். அவர் தலையில் இருந்து ஒரு முடியைப் பறித்துப் போட்டு ஒரு அசுரனை உண்டாக்கி னார். அந்த அசுரன் கையில் வாளுடன் அம்பரீஷனைக் கொல்வதற்காக ஒர் அடி முன் வைத்தான். மாபெரும் விஷ்ணு பக்தனாகிய அம்பரீஷனைக் காப்பாற்றுவதற்காக