பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/306

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாரத புராணம் 277 பொறுக்காத மற்ற பிராமணர்களும் ஊர்க்காரர்களும் அவனை ஊரை விட்டே விரட்டினர். அந்த பிராமணன் எல்லாவற்றையும் இழந்து உண்பதற்கு ஒன்றுமில்லாமல் மனைவிக்கும் தண்டகேது என்றொரு பிள்ளை இருந்தான். அவனும் பெற்றோர்கள் சென்ற வழிகளிலேயே சென்று பெரும் பாவத்தைச் சேர்த்துக் கொண்டான். ஒரு நாள் இரவு ஒய்வெடுப்பதற்காக ஒரு விஷ்ணு கோயிலுக்குச் சென்றான். தான் படுப்பதற்கு ஒர் இடம் தேவைப்பட்டதால் தன்னுடைய உடையைக் கொண்டு கோயிலைச் சுத்தம் செய்தான். இரவில் வெளிச்சம் தெரிய வேண்டும் என்பதற்காக விஷ்ணுவின் எதிரே இருந்த விளக்கைத் தூண்டி விட்டான். இந்த ஏற்பாடு களை அவன் செய்து கொண்டிருக்கும் போது, அந்த ஊர்க் காவலர்கள் அவனைத் திருடன் என்று கருதிக் கொன்று விட்டார்கள். உடனே விஷ்ணுலோகத்திலிருந்து விமானம் வந்து தண்டகேதுவை ஏற்றிச் சென்றது. விஷ்ணுலோகத்தில் சென்று இன்பம் அனுபவித்த தண்டகேது மறுபடியும் பூலோகத்தில் ஒர் அரசனாகப் பிறந்தான். பழம் பிறப்பு நினைப்புடனேயே அவன் பிறந்தான். அவன் வேறு யாருமல்ல; நான்தான்.” கோயிலைத் துப்புறவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், தான் படுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் சுத்தம் செய்தான். விளக்கைத் தூண்ட வேண்டும் என்றில்லாமல் தனக்கு வெளிச்சம் வேண்டும் என்பதற்காகத் தூண்டி விட்டான். அனிச்சையான இந்த இரண்டு செயல் களுக்காக அவன் விஷ்ணுலோகம் சென்று சில காலம் இன்பம் அனுபவித்தான் என்றால், விருப்பத்தோடு இந்தத் திருப்பணி களைச் செய்யும் நான் எவ்வளவு புண்ணியத்தைச் சேர்ப்பேன் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? விதஹோத்ரா என்ற