பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 329 களையும் அசுரன் மேல் செலுத்தவும், அவன் யானை வடிவம் எடுத்து தேவியின் வாகனமாகிய சிங்கத்தைத் துதிக்கையால் பற்றி இழுத்தான். தேவி யானையின் துதிக்கையை வெட்டவும், அசுரன் மறுபடியும் எருமை வடிவெடுத்தான். எருமை வடிவிலிருந்து அசுரன் முதுகில் ஏறி எருமையின் தலையைத் துணித்தாள் தேவி. எருமை உடலிலிருந்து மகிஷாசுரன் வெளி வருவதற்காகத் தலையை வெளியே நீட்டியவுடன், தலையைத் துணித்தாள் தேவி. தேவர்கள் இதனைக் கண்டு மகிழ்ச்சியோடு பூமாரி பொழிந்தனர். அப்ஸரஸ்கள் நடனமாடினர். கந்தர்வர்கள் பாடினர். கம்ப நிகம்பர் கதை முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற அசுர சகோதரர்கள் மூன்று உலகத்தையும் வென்று ஆட்சி செய்தனர். மாபெரும் வெற்றி அடைந்த அவர்கள் இந்திரனுடைய ஐராவதம் முதல், அக்னியின் அஸ்திரம் வரை தமதாக்கிக் கொண்டனர். சிந்தாமணி, பாரிஜாதம் முதலிய அனைத்தும் அவர்களுடையதாயிற்று. சண்டன், முண்டன் என்ற இரண்டு பணியாளர்களை வைத்திருந்தனர். ஒருமுறை கலங்கிப் போன தேவர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் கைலாயமலையில் வந்து தவமிருந்தனர். பார்வதி தேவியார் அவ்வழியே சென்றபொழுது இவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி நின்று வணங்குவதைக் கண்டு, ‘என்ன விஷயம்! என்று கேட்க, அவர்கள் தங்கள் நிலையை எடுத்துக் கூறினர். இந்தக் கொடுமையைக் கேட்ட பார்வதி தன் உடம்பிலிருந்து சிவனையும் அம்பிகையையும் வெளிப்படுத்தினார். எல்லை மீறிய அழகுடன் அம்பிகை கைலையைச் சுற்றி வந்தாள். பணியாளர்களான சண்டனும் முண்டனும், அம்பிகையைப் பார்த்துவிட்டு தங்கள் தலைவர்