பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிரம்ம புராணம் 7 தோன்றினான். ஆகவே குழம்புவதற்கு ஒன்றுமில்லை” என்று விடை பகர்ந்தார். தட்சன், அசிக்கிளி என்பவளை மணந்து ஐயாயிரம் பிள்ளைகள் பெற்றனர். இவர்கள் உலகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க முனைந்த பொழுது, நாரதர் அங்கு தோன்றி, "உலகம் எப்படிப்பட்டது, பூகோள அமைப்பு எப்படி என்பதை அறிந்து கொள்ளாமல் நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது தவறு. எல்லாரும் சென்று உலகம் முழுவதையும் சுற்றிப் பார்த்த பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்கலாம்” என்று கூறினார். அதன்படியே தட்சனின் மைந்தர்கள் ஐயாயிரவரும் உலகைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டுச் சென்றனர். சென்ற வர்கள் சென்றவர்கள்தான். திரும்பவேயில்லை. தட்சன் மறுபடியும் ஆயிரம் பிள்ளைகளைப் பெற்றான். இவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப் புறப்பட்ட பொழுது மறுபடியும் நாரதர் தோன்றி இவர்களது மூத்த சகோதரர்களுக்குச் சொன்னவற்றையே திரும்பக் கூறினார். இந்த ஆயிரவரும் உலகைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர். சென்றவர்கள் மீளவே இல்லை. தன்னுடைய ஆயிரம் பிள்ளைகளும் நாரதரின் புத்திமதி யைக் கேட்டு அதன்வழி நடக்கத் தொடங்கிக் காணாமலே போய்விட்டார்கள் என்பதனால், நாரதர்பேரில் தட்சனுக்கு அளவற்ற கோபம் உண்டாயிற்று. எப்படியாவது நாரதரைக் கொன்று விட வேண்டும் என்று தட்சன் முயல்கையில் பிரம்மா குறுக்கிட்டார். நாரதரைக் கொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்காகச் சில வரையறைகளை பிரம்மா நிறைவேற்ற வேண்டும் என்று தட்சன் கூறிவிட்டான். அவ்வரையறைகளின்படி தட்சன் பெண்களுள் ஒருத்தியை பிரம்மா மணந்துகொள்ள வேண்டும். அவள் வயிற்றில் நாரதர்