பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 343 4. நரசிம்ம அவதாரம் ஹிரண்யாக்ஷா என்ற அசுரனுக்கு, ஹிரண்யகசிபு என்ற சகோதரன் இருந்தான். தன்னுடைய அண்ணன் கொல்லப்பட்ட விஷயம் அறிந்து, விஷ்ணுவைக் கொல்ல வேண்டும் என்று சபதம் கொண்டிருந்தான். அதற்காகப் பிரம்மனை வேண்டிக் கடுந்தவம் புரிந்தான். அவனுடைய தவத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மன், “ன்ன்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார். அதுகேட்ட ஹிரண்யகசிபு, ‘ஐயனே! யாராலும் வெல்ல முடியாத அரசனாக நான் இருக்க வேண்டும். இரவிலோ, பகலிலோ என்னை யாரும் கொல்லக் கூடாது. மனிதனாலோ, விலங்கி னாலோ எனக்கு இறப்பு ஏற்படக் கூடாது. ஆகாயத்திலோ, நீரிலோ, பூமியிலோ நான் கொல்லப்படக் கூடாது" என்ற வரத்தைக் கொடுக்குமாறு வேண்ட, பிரம்மனும் அப்படியே கொடுத்தார். பிரமனின் வரம் பெற்ற ஹிரண்யகசிபு, தேவர்களை விரட்டி விட்டு, மூன்று உலகங்களையும் தானே ஆண்டு வந்தான். ஹிரண்யகசிபுவிற்கு பிரகலாதன் என்ற மகன் இருந்தான். விஷ்ணுவின் மீது பெரிதும் பக்தி கொண்டவன். விஷ்ணுவைக் கொல்ல வேண்டும் என்று உறுதி கொண்டிருந்த அசுரன், தன் மகன் விஷ்ணு பக்தனாக இருப்பதை அறவே வெறுத்தான். எவ்வளவோ சொல்லியும், பிரகலாதனை மாற்ற முடியவில்லை. கோபம் கொண்ட ஹிரண்யகசிபுதன் மகனைக் கொல்வதற்காகப் பல வழிகளில் முயன்றும், ஒவ்வொரு முறையும் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டான் பிரகலாதன். தேவருகிலிருந்து விரட்டப்பட்ட தேவர்கள் விஷ்ணுவை வேண்டினர். விஷ்ணுவும், இதற்கு ஒரு ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.