பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 பதினெண் புராணங்கள் அரச நீதிகள் இராமன், இலக்குவனுக்குக் கூறியதாகப் பல அரச நீதிகளை அக்னி புராணம் கூறுகிறது. அவையாவன: அரசனுடைய கடமைகள் நான்கு ஆகும். முதலாவது, செல்வத்தைச் சேகரிக்க வேண்டும். இரண்டாவது, சேகரித்த தைப் பெருக்க வேண்டும். மூன்றாவது, அதனைக் காக்க வேண்டும். நான்காவது, அதனை வழங்க வேண்டும். அரசன் பொறுமை உடையவனாக இருத்தல் வேண்டும். பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பணிவும் பொறுமையும் புலன்களை வெல்வதால் கிடைக்கின்றது. பொறி புலன்கள் மதம் பிடித்த யானை போன்றவை. அவற்றைக் கட்டுப்படுத்தா விட்டால் பொறுமை, பணிவு என்ற பண்புகளை இந்த யானைகள் கீழே போட்டு மிதித்து விடும். அரசன், அஹிம்சை மேற்கொள்பவனாய், சத்தியத்தைக் காப்பவனாய், தூய்மை உடையவனாய் இருத்தல் வேண்டும். அரசன் எல்லாச் சடங்குகளையும் தவறாமல் செய்வதுடன் ஏழைகட்கு உணவிடுவதையும், பாதுகாப்பு வேண்டி வருபவர் களைப் பாதுகாக்கவும் வேண்டும். இனிய வார்த்தைகளையே பேச வேண்டும். இன்றிருக்கும் உடம்பு நாளை இல்லாமல் போகும். உடம்புக்குத் தேவைப்படும் இன்ப வேட்டையில் இறங்கி அரச கடமைகளிலிருந்து தவறுபவன் அடிமுட்டாளாவான். துயரப்பட்ட மக்கள் கண்ணிர்விட்டுக் கொடுக்கும் சாபம் எத்தனை பெரிய அரசனையும் கீழே தள்ளிவிடும். தேவர் களுக்கும் விலங்குகளுக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான் உண்டு. தேவர்கள் இனிய வார்த்தை பேசுகின்றனர். விலங்குகள்