பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/410

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அக்னி புராணம் 381 வார்த்தை பேசுவதுபோல மன்னனும், தனக்கு நன்மை செய்யும் நண்பர்களிடம் மட்டும் அல்லாமல், தீமை செய்யும் பகைவர்களிடம் கூட இனிய சொற்களையே பேச வேண்டும். அரசன் தன் குருவிடம் வணக்கத்தையும், நேர்மையான வர்களிடம் நேர்மைப் பண்பையும், கடமை மூலம் தெய்வங் களையும், அன்பு செய்வதன் மூலம் பணியாளர்களையும், தானம் செய்வதன் மூலம் ஏழைகளையும் திருப்திப்படுத்த வேண்டும். அரசனுக்கு ஏழு அங்கங்கள் உள்ளன. 1. அரசன், 2. அமைச்சர்கள், 3. நண்பர்கள், 4. கருவூலம், 5. படை, 6. கோட்டை, 7. நாடு. இவற்றுள் மிக முக்கியமானது நாடாகும். எப்படியும் அதனைக் காத்தே தீரவேண்டும். அரசன் அமைச்சர் களையும், அரசியல் புரோகிதனையும் தேர்ந்தெடுப்பதில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். அறிவில்லாத முட்டாள்களாகிய அமைச்சர்களை அரசன் கலந்தாலோசிக்கக் கூடாது. அரசனுக்குரிய அடையாளங்கள், அவனுடைய செங் கோல், பொன்னாலாகிய தடி, வெண்கொற்றக்குடை ஆகியவையாம். அரசனுடைய குடை அன்னத்தின் தூவி, மயிலிறகு, கொக்குகளின் இறகு ஆகியவற்றால் செய்யப் படலாம். எதனால் செய்யப்பட்டாலும், முழுவதும் ஒன்றாகவே இருக்க வேண்டுமே தவிர, தூவி, மயிலிறகு, இறகு ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று கலக்கக் கூடாது. சிம்மாசனம் மரத்தால் செய்யப்பட்டுப் பொன் தகட்டால் மூடப்பட வேண்டும். வில் என்பது இரும்பு, கொம்புகள், மரம் ஆகியவற்றில் எதனாலும் செய்யப்படலாம். சிறந்த வில் என்பது நான்கு கையளவு நீளம் உடையதாய் இருக்க வேண்டும். அரசன் ஒராண்டு வரிப்பணத்தைப் படைக்கலங்கள் செய்யச் செலவழிக்கலாம்.