பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(9. பவிஷ்ய புராணம்) இப்புராணம் பற்றி. மச்ச புராணம், பவிஷ்ய புராணத்தை பிரம்மனே முதல் மனுவுக்குச் சொன்னார் என்று சொல்லுகிறது. இது 14,500 பாடல்களைக் கொண்டது. இதற்கெதிராகப் பவமுனிவர் இப்புராணத்தை மனுவுக்குச் சொன்னார் என்றும், இதில் 14,000 பாடல்கள் உள்ளன என்றும் அக்னி புராணம் கூறுகிறது. இப்புராணம் 5 சருக்கங்களைக் கொண்டது. அவையாவன: ) பிரம்மா 2, வைஷ்ணவம் 3) சைவம் 4 சருக்கம் 5 பிரதிசருக்கம் என்பனவாம். ஆனால் இப்பொழுது புழக்கத்தில் இருக்கும் பவிஷ்ய புராணம் நான்கு சருக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது. இது சிவ சருக்கம் என்றோ, வைணவ சருக்கம் என்பவற்றிற்கு பதிலாக மத்தியமா சருக்கம் என்றோ குறிப்பிடுகின்றது. இப்புராணம் குறிப்பிடும் நான்கு சருக்கங்கள் 1) பிரம்மா 2) மத்யமா 3) பிரதி சருக்கம் 4) உத்தரா ஆகியனவாம். இப்புராணம் இங்குள்ளபடி பவிஷ்ய புராணம் பிரம்மாவாலோ, பல முனிவராலோ எந்த மனுவுக்கும் சொல்லப்படவில்லை. சதானிக்கா என்னும் மன்னன் வியாசமுனிவரைச் சந்தித்து தர்ம சாஸ்திரங்களைப் பற்றிச் சொல்லுமாறு கேட்க, அவர்தம் சிடனாகிய சுமந்துவிடம் செல்லுமாறு பணித்தார்.