பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவிஷ்ய புராணம் 407 நன்முறையில் பயன்படுத்துதல் சாலச் சிறந்தது. தன்னுடைய செல்வத்தினின்று பிறருக்கு தானம் அளிப்பதே மிகச் சிறந்த முறையாகும். நீண்ட ஆயுளும், வலிமையான உடலும் பெற்று, மற்றவர்களுக்கு எவ்விதப் பிரயோஜனமும் இன்றி வாழ்வதில் எப்பயனும் இல்லை. ஒவ்வொரு யாகம் செய்யும் பொழுதும் தட்சிணை வைக்க வேண்டும். 1. கோதானம் : பசுவும், கன்றும் தானம் செய்யப் பெற்றால், சுவர்க்கத்தில் நீண்ட நாட்கள் வாழலாம். 2. விருஷப தானம் : எருதினை தானம் செய்தால் ஏழு ஜென்மத்தின் பாவம் தொலைந்து விடும். 3. பூமி தானம் : சிறிதளவு பூமியை தானம் செய்தாலும், செய்த பாவங்கள் நீங்கும். 4. ஆபக தானம் : ஒராயிரம் பாத்திரங்களை தானம் செய்தால், செல்வம், மகன் பிறப்பு ஆகியவை கிடைக்கும். 5. கிருஹ தானம் : அலங்கரிக்கப்பட்ட வீட்டினை தானம் செய்தால், சிவபெருமானின் இருப்பிடம் செல்ல முடியும். 6. அன்னதானம் : உணவினை தானம் செய்தால், விஷ்ணுவின் இருப்பிடத்தை அடையலாம். 7. பிரபதானம் : வழிப் போக்கர்களுக்கும், பிரயாணம் செய்பவர்களுக்கும் தண்ணீர் வழங்குதல், சுவர்க்கம் செல்ல மேலே கூறியவற்றுடன் இன்னும் பல வழிகளில் தானம் செய்வதைப் பற்றியும் இப்புராணம் பேசுகிறது. கல்வி ஒரு கிணற்றினைத் தோண்டி நீர் எடுப்பது போல, ஒரு மாணவன் தன் குருவிற்குக் கடமையினைச் செய்து