பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 பதினெண் புராணங்கள் ஞானம் பெறுகிறான். தன்னுடைய கல்வி முடிந்தவுடன் தன்னுடைய குருவிற்கு, நிலம், குடை, துணிகள், தானியங்கள், காய்கறிகள் இவற்றை தட்சிணையாகக் கொடுக்கலாம். தட்சிணை செலுத்தினால் அன்றி, அவன் கற்ற கல்வி முடிவு பெற்றதாக ஆகாது. காயத்ரி மந்திரம் பற்றிய உண்மையான பொருளை உணர்ந்தவரும், அம்மந்திரத்திற்கான வழிமுறைகளைக் கடைப் பிடிப்பவருமே யாவரிலும் சிறந்த ஆசிரியனாகக் கருதப் படுவார். ஆசிரியர் நிலையில், ஐந்து விதமான வளர்ச்சிப் படிகள் உண்டு. அவையாவன : 1. ஆச்சாரியர் : வேதங்களின் கல்ப ரகஸ்யங்களை உபதேசிப்பவர். 2. உபாத்தியாயர் : வேதங்களைக் கற்று அதனை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்பவருக்குப் படிப்பறிவித்தல். 3. குரு : இவருடன் மாணவர்கள் தங்கிக் கல்வி கற்று, குருவின் இல்லத்தினருடன் சேர்த்துக் கொள்ளப்படுவர். சடங்கு முறைகள் அனைத்தையும் குரு போதிப்பார். இவர்களுக்கு உணவு, உறைவிடம் அனைத்தையும் குருவே வழங்குவார். 4. ரித்விஜா : யாகங்கள் செய்வதையே தொழிலாகக் கொண்டவர். 5. மகா குரு : எல்லா ஆசிரியர்களிலும் தலைசிறந்து நிற்பவர். அனைவராலும் வணங்கப்படுபவர். இராமாயணம், பாரதம், பதினெண்புராணம் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவராயினும், இறைவனின் நாமத்தையே விடாது ஜெபிப்பவர்.