பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவிஷ்ய புராணம் 413 இவற்றைப் பற்றி மற்ற புராணங்களில் கொடுத்திருப்பதால் அங்கு குறிப்பிடப் பெறாத பகுதிகளை மட்டும் இங்கு தருகிறோம், இனி பவிஷ்ய புராணம் கலி. பற்றிக் கூறுகிறது. 1. பெளரவர்கள் : பாண்டு புத்திரர்களில் மூன்றாவது இடத்தைப் பெறுபவன் அருச்சுனன். இவனுடைய பேரன் பரீட்சித்து மன்னன். இம்மன்னனின் பேரன் சடனிகா ஆவான். அவனுடைய மகனே வீரம் மிகுந்த அஸ்வமேத தத்தா ஆவான். இவனுடைய மகனே அதிசிம்ம கிருஷ்ணா. இம்மன்னனுடைய காலத்திலேதான் இப்புராணத்தின் இப்பகுதி எழுதப்பட்டது.) அதிசிம்ம கிருஷ்ணாவின் மகன் நிசக்o. அஸ்தினா புரத்தை கங்கை தன்னுள் அடக்கிக் கொள்ளும் பொழுது, நிசக்o அரசன் அரியணை துறந்து கெளசம்பி நகரத்திற்குச் சென்று விடுவான். அவனுக்கு எட்டு மகன்கள் இருப்பர். அவனுடைய முதல் மகன் உஷ்ணா. புரு வம்சத்தில் வந்த இருபத்தி ஐந்து பேர் அரசாள்வர். இந்தப் பெளரவ வம்சத்தில் வருவோர் தேவர்களாலும், முனிவர்களாலும் போற்றப் பெறுவர். இவ்வம்சத்தினின்று பிராமணர்களும், சத்ரியர்களும் தோன்றி, அருச்சுனன் வழிவம்சம் கலியுகத்தில் முடிவு பெறும். 2. இகஷ்வாகு : அடுத்து குறிக்கப் பெறுவது இக்ஷவாகு பரம்பரையினர். இப்பரம்பரையில் வந்த பிரத்தியோமாவின் மகன் திவாகரன், மத்தியதேசத்தில் அயோத்தியை ஆண்டு வருகிறான். (திவாகர மன்னன் காலத்தில்தான், பவிஷ்ய புராணத்தின் இப்பகுதி எழுதப்பட்டது). திவாகரன் பரம்பரையில் வந்தவனே சகாதேவன். இப்பரம்பரையில் இறுதியாக வருபவன் சுமித்ரா என்ற அரசன். இக்ஷவாகு பரம்பரையினர் மிக்க தைரியமுள்ளவர்களாகவும், சிறந்த போர் வீரர்களாகவும் இருப்பர்.