பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம வைவர்த்த புராணம் 431 ஒரு மனிதனுக்கு ஐவகை தந்தையர் பொறுப்பு வகுக்கப் பட்டுள்ளது. அவை 1. ஜன்ம தாதா 2 அன்ன தாதா 3. பயத் ரதா 4 வித்யா தாதா 5. பத்னிபிதா ஆகியவை ஆகும். பதினான்கு வகையான பெண்கள், தாய் எனக் கருதப்படுவர். தாய், தந்தையின் தாய், தாயின் தாய், தந்தையின் சகோதரி, தாயின் சகோதரி எனப் பதினான்கு உறவு முறையினர் குறிக்கப்படுகின்றனர். ஒருவன் தன் ஆசிரியனுடைய மகன் அல்லது மகளைத் தன் உடன்பிறந்தவராகக் கருத வேண்டும். பெண்ணின் தந்தையும், மணமகனின் தந்தையும் சகோதரர்கள் போல் நடந்து கொள்ள வேண்டும். இம்முறைக்கு வைவஹிகா என்று பெயர். இவ்வுறவு முறைகள் அன்றி, வேறு உறவு முறைகளும் உண்டு. ஒரு நண்பரிடத்தில் உறவினன் போல் பழகுவது பிரிதிஜா எனப்படும். இப்படிப்பட்ட உறவுகள் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை. உயவர்ஹன முன்னொரு காலத்தில் கந்தமாதனம் என்ற மலையில், வயது முதிர்ந்த கந்தர்வ தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். செல்வம் நிறையப் பெற்றிருப்பினும், குழந்தைச் செல்வம் வேண்டிச் சிவபெருமானை தியானித்தனர். சிவபெருமான் கொடுத்த வரத்தின்படி நாரதர் இவர்கட்கு மகனாகப் பிறந்தார். வசிட்டர் இக்குழந்தைக்கு உபவர்ஹனா என்று பெயரிட்டார். பெரும் மரியாதைக்குட்பட்டவன் என்ற பொருளில் இப்பெயர் இடப்பட்டது. இக்குழந்தை சிறுவனாக வளர்ந்தபின் தியானம் செய்யத் துவங்கினான். கந்தர்வர்களின் மன்னனாகிய சித்ரசேனாவின் பெண்கள் ஐம்பது பேரும், உபவர்ஹனாவை மணக்க விரும்பினர். வேறு வழியின்றி அவர்களை மணந்து கொண்ட உபவர்ஹனா ஒருநாள் பிரம்மனை தரிசிக்கச்