பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம வைவர்த்த புராணம் 437 குஷத்வஜா என்ற மன்னனுக்கும், அவன் மனைவி மாதவிக்கும் பெண்ணாகப் பிறந்தவள் துளசி, பிறந்தவுடனேயே யாவரும் அதிசயிக்கும் வண்ணம் காட்டிற்குச் சென்று நாராயணனை வணங்கி வந்தாள். நீண்ட காலத்திற்குப் பிறகு பிரம்மன் அவள் எதிரே தோன்றினான். இப்பிறப்பில் நீ நாராயணனை அடைய முடியாது என்றார். ஜதீஸ்மரா ஆற்றல் காரணமாக இதன் காரணத்தை அறிந்துகொண்டார். முன் ஜென்மத்தில் கோலோகாவில் ஒரு கோபிகையாக இருந்த அவள் கிருஷ்ணன் மீது காதல் கொண்டதால், ராதையினால் "பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்கக் கடவாய்" என்று சாபமிடப்பட்டாள். பிரம்மன் துளசியிடம் சங்கதுடனின் கதையைக் கூறினார். சங்கதுடன் ஒரு கோபியை மணக்க விரும்ப, அதனால் கோபம் அடைந்த ராதை அவன் ராட்சச னாகப் பிறக்கச் சாபமிட்டாள். இப்பொழுது ராட்சசனாகப் பிறந்துள்ள சங்கதுடன் தன் முற்பிறப்பினை அறிந்தவன் ஆதலின், இப்பிறப்பிலேனும் துளசியை மணந்து கொள்ள வேண்டி பிரம்மனை வேண்டினான். ராதையிடம் அனுமதி பெறுமாறு கூறினார். அனுமதி பெற்ற துளசி காட்டில் சங்கதுடனைக் கண்டு மணம் புரிந்து இன்பமாக வாழநதாள. அரக்கனாகிய சங்கதுடன் தேவர்களைக் கொடுமைப் படுத்தினான். பிரம்மன் தலைமை ஏற்று, கிருஷ்ணனைச் சென்று வேண்டினர். அரக்கனுக்குத் தான் கொடுத்துள்ள துளசிமாலை காரணமாக அவனை வெல்ல முடியவில்லை என்றும், தானே சென்று அதனைப் பெற்றுக் கொள்வதாகவும் கிருஷ்ணன் கூறினார். சிவனிடம் ஒரு கோடரியைக் கொடுத்து, அதனைக் கொண்டே, அவ்வரக்கனை அவர் கொல்ல வேண்டும் என்று கூறி, ஒரு பிராமண வடிவம் கொண்டு அவ்வரக்கனிடம் சென்று யாசித்தார். சங்கதுடனின் மனைவி