பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம வைவர்த்த புராணம் 445 கொடுத்தாள். ஒவ்வொரு மாதமும் ஆறாம் நாள், சஷ்டியைத் தொழ வேண்டும். குழந்தை பிறந்த ஆறு, இருபத்தியோரு நாட்களில், சஷ்டி தேவதைக்கு மலர், பழங்கள் முதலியன வைத்துப் பூஜை செய்ய வேண்டும். நீலநிறக் கண்களை உடைய மங்கல சண்டி, துர்க்கையின் மற்றொரு வடிவினள். இத்தேவதை பெண்களுக்கு ஆரோக்கியமான உடலையும், செல்வத்தையும் தருபவள் என்பதால் மங்கல சண்டி எனும் பெயர் பெற்றாள். திருப்புராசுர அசுரனைக் கொல்வதற்குச் சிவன் கஷ்டப்பட்ட பொழுது, மங்கல சண்டி தன் சக்தியினைக் கொடுத்து வெற்றி பெறச் செய்தாள். முதன் முதலில் சிவனாலும், அடுத்து செவ்வாய்க் கோளினாலும், மூன்றாவது மனு வழியில் வந்த மங்கல அரசனாலும், நான்காவது பெண்களினால் செவ்வாய்க் கிழமைகளிலும் வணங்கப்பட்டாள். காசிப முனிவரின் இச்சாமாத்திர உற்பத்தியாக உண்டாக்கப்பட்ட மானச தேவதை மிக அழகான நிறம் உடையவள் என்பதால் ஜகத்கெளரி என்று அழைக்கப்பட்டாள். இவள் சிவனைக் கைலாயத்தில் வணங்கி இறந்தவர்களை உயிருடன் எழுப்பும் கலையினைக் கற்றாள். கிருஷ்ணனைப் புஷ்கராவில் வணங்கி, என்றென்றும் எல்லோராலும் வணங்கப்படுவாய் என்ற ஆசியும் பெற்றாள். ஜரத்கரு உறங்கிக் கொண்டிருந்தான். வெகு நேரமாகியும் அவன் எழுந்திருக்க வில்லை. இதனால் மாலையில் அவன் பூஜை செய்வது தடைப்பட்டுவிடும் என்பதாலும், அவ்வாறு பூஜை செய்யாமல் இருப்பது பெரும் பாவத்தைச் சேர்க்கும் என்ற காரணத்தி னாலும் அவனை எழுப்பினாள். உறக்கம் கலைந்து எழுந்த ஜரத்கரு கடுங்கோபம் கொண்டு, அவள் நரகத்திற்குச் செல்வாள் எனக் கூறிவிட்டு, அவளைப் பிரிந்து சென்று தவம் செய்யலானான். சில காலங்களுக்குப் பிறகு சுஸ்திகா,