பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம வைவர்த்த புராணம் 453 தேற்றினான். அடுத்த பிறவியில் அவள் கந்தலி என்னும் கிழங்குச் செடியாகப் பிறந்தாள். அஷ்டவக்ர முனிவர் கிருஷ்ணனும், ராதையும் மாளய மலையின் உச்சியில் அமர்ந்திருக்கும் பொழுது அஷ்டவக்ர முனிவர் அங்கு வந்து அவர்களை வணங்கினார். கூன் விழுந்த உடலை உடையவர். அவரைப் பார்த்த ராதை பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தாள். ஆனால் கிருஷ்ணன் அவளை சிரிக்கவேண்டாம் என்று கூறிவிட்டு, அவருடைய கதையைக் கூறினார். அஷ்டவக்ரமுனிவர் முற்பிறப்பில், தேவலா என்ற பெயருடைய பிராமணனாகப் பிறந்தான். தன்னுடைய மனைவி யுடன் நீண்ட காலம் கழித்துவிட்டு, இனிப் பெண்களுடன் தொடர்பே இல்லாமல் இருக்க நினைத்தான். ரம்பை என்னும் அப்சரஸ், தேவலாவை மணக்க விரும்பினாள். தான் எடுத்த முடிவிலிருந்து மாறுபட விரும்பாத தேவலா, ரம்பை கேட்ட வுடன் மறுத்துவிட்டான். இதைக் கேட்ட ரம்பை, உனக்குக் கோணல் புத்தி உள்ளது. அதைப் போலவே உன் உடலும் கோணலாகப் போகட்டும் என்று சபித்தாள். அத்துடன் நீ இதுவரை சேர்த்துள்ள புண்ணியம் அனைத்தும் பலனில்லாமல் போகட்டும் என்றும் கூறினாள். மிகக் கடுமையான இச் சாபத்தைத் தாங்கமாட்டாத தேவலா தன்னை எரித்துக் கொள்ள முயற்சி செய்கையில் கிருஷ்ணன் அவனைத் தடுத்து நிறுத்தினான். அவனுடைய எட்டு எலும்புகளும் கோணலாகிப் போனதால், கிருஷ்ணன் அவனுக்கு அஷ்டவக்ரா என்று பெயரிட்டான். அவனை தியானம் செய்யும்படி கிருஷ்ணன் கூற, மாளய மலையில் அஷ்டவக்ரா முனிவர் அறுபதாயிரம் ஆண்டுகள் தவம் புரிந்தார். கிருஷ்ணனின் அருளினால், அம்முனிவர் சாபம் தீர்ந்தது.