பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 பதினெண் புராணங்கள் பிரம்மனின் வீழ்ச்சி பிரம்மன் அகங்காரத்தால் பீடிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் இருந்து எவ்வாறு வீழ்ச்சி அடைந்தான் என்பதை கிருஷ்ணன் ராதைக்கும் சொன்னார். படைத்தலாகிய தன் தொழிலில் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் படைக்கும் ஆற்றல் தன்னிடம் இருப்பதால் தன்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்ற அகங்காரம் பிரம்மனின் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது. இந்த நிலையில் தேவ கன்னிகையான மோகினி பிரம்மன்மாட்டுக் காதல் கொண்டு அவனை மணக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினாள். ஆனால் பிரம்மன் அகங்காரம் காரணமாக மோகினியின் காதலை ஏற்க மறுத்து உதறிவிட்டார். தன்னுடைய உண்மையான காதல் உதாசீனப்படுத்தப்பட்டதைப் பொறுக்காத மோகினி, “உலகில் யாரும் உன்னை வணங்க மாட்டார்கள். கோவிலெடுக்க மாட்டார்கள். பிரம்மனை முன்னிலைப்படுத்திச் செய்யப்படும் சடங்குகள் இல்லா திருத்தல் பயனற்றுப் போய்விடும்” என்ற சாபத்தை மோகினி பிரம்மனுக்குத் தந்தாள். அதிர்ந்து போன பிரம்மன், இச் சாபத்தினின்று எவ்வாறு தப்பிப்பது என்று யோசித்து, விஷ்ணுவிடம் சென்று முறையிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். அப்படியே வைகுந்தம் சென்று விஷ்ணுவின் தரிசனத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான். அப்படிக் காத்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் கண்ட காட்சி அவனுக்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. திசைமுகன் என்ற பெயருக்கு ஏற்பத் தனக்கு நான்கு தலை இருப்பதில் பெருமையும், அகங்காரமும் கொண்டிருந்த பிரம்மன் அங்கே கண்ட காட்சி அவனுடைய மூச்சையே நிறுத்திவிடும் போல் இருந்தது. பத்துத் தலைகள் உடைய பிரம்மன், நூறு தலைகளுடைய பிரம்மன், ஆயிரம் தலைகள் உடைய பிரம்மன்