பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/484

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிரம்ம வைவர்த்த புராணம் 455 என்று பல பிரம்மன்கள் விஷ்ணுவின் தரிசனத்திற்காக அங்கே கூடி இருந்தனர். இவனுடைய முறை வந்ததும் அதிர்ந்துபோன பிரம்மன், இவர்களெல்லாம் யார் என்று விஷ்ணுவையே கேட்டான். விஷ்ணு சாவதானமாக விடை கூறினார்: "பிரம்மனே! இங்கே காணப்படுகின்ற சொர்க்க, மத்திய, பாதாளம் என்பவற்றை நீ படைத்தாய். ஆனால் இந்தப் பெரிய அண்டத்தில் இதைப் போன்றனவும், இதைவிட மிகப் பெரியனவும் ஆகிய பல உலகங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. இந்தச் சிறிய உலகைப் படைத்த உனக்கு நான்கு தலைகள் போதுமானது. இதைவிடப் பெரிய உலகம், மிகப் பெரிய உலகம், மாபெரும் உலகம் ஆகிய உலகங்களைப் படைத்த பிரம்மன்களுக்கு அந்தப் படைப்பின் பெருமைக்கு ஏற்ப பத்து, நூறு, ஆயிரம் என்ற தலைகள் உள்ளன. பிரம்மன்கள் என்று கணக்கிட்டுப் பார்த்தால் நீதான் கடைசியில் நிற்கும் சிறிய பிரம்மன், உனக்குக் கீழ் வேறு பிரம்மன்கள் இல்லை ஆதலால் நீதான் கடைசியில் நிற்பவன்” என்று விஷ்ணு கூறியவுடன் பிரம்மனுடைய அகங்கார மெல்லாம் காற்றில் பறந்துவிட தன்னுடைய அறியாமையை நினைந்து வெட்கித் தலைகுனிந்து நின்றான். இந்திர கர்வபங்கம் பிரகருதி ஆகிய பெண்ணை இந்திரன் கவனியாமல் விட்டு அவளுக்கு மனத்துயரை உண்டாக்கினான். சினம் கொண்ட பிரகருதி, உன்னுடைய குரு பிருகஸ்பதியாலேயே நீ உன்னுடைய பதவியை இழப்பாய்’ எனச் சாபம் தந்தாள். அதற்கேற்ப ஒருநாள் அமராவதியில் இந்திரன் தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து, தேவமாதர்களின் ஆடல் பாடல் களில் ஈடுபட்டு இருக்கின்ற நேரத்தில் தேவகுருவாகிய பிரகஸ்பதி இந்திரனுடைய சபைக்குள் வந்தார். பதவி கர்வமும், கேளிக்கை மோகமும் கொண்ட இந்திரன் சிம்மாசனத்தை