பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 பதினெண் புராணங்கள் இவற்றை அடுத்து வரும் துருவ நட்சத்திரம் பற்றிய கதையும், தட்சன் பற்றிய கதையும் முன்னரே கூறப்பட்ட தா.கவின் இங்கே விவரிக்கப்படவில்லை) பராசர முனிவர் கதை : முன்னொரு காலத்தில் கல்மஷ பாதன் என்ற அரசனும், ருத்ரா என்ற அசுரனும் அடுத்தடுத்த இடங்களில் வாழ்ந்து வந்தனர். வசிட்டன் மகன் சக்த்ரியும், அவன் சகோதரர்களும் அப்பகுதியில் சுற்றித் திரிந்தனர். ருத்ரா என்ற அசுரன் அழகிய அப்பிள்ளைகளைப் பிடித்துச் சாப்பிட வேண்டும் எனப் பலகாலமாக நினைத்து வந்தான். ஆனால் அவன் அசுரன் என்ற காரணத்தால் வசிட்ட குமாரர்கள் அவனை நெருங்குவதே இல்லை. இதற்காக ருத்திரா ஒரு சூழ்ச்சி செய்தான். அரசனாகிய கல்மஷபாதனுடைய உடம்புக்குள் இந்த அசுரன் புகுந்து கொண்டான். அரசனிடத்தில் அடிக்கடி வந்து போகும் பழக்கமுள்ள வசிட்ட குமாரர்கள் இப்பொழுது தாங்கள் பார்க்க வரும் அரசன் கல்மஷபாதன் பழைய கல்மஷ டாதன் அல்லன். அவ்வுடம்பினுள் ருத்ரா என்ற அசுரன் ஒளிந் திருக்கிறான் என்பதை அறியாத அக்குமாரர்கள் அப்பாவித் தனமாக அரசனிடம் வர, அவனுள் இருந்த ருத்ரா என்ற அசுரன் அவர்கள் நூறு பேரையும் பிடித்துத் தின்றுவிட்டான். இச்செய்தி அறிந்த வசிட்டனும், அவன் மனைவி அருந்ததியும் தாங்க முடியாத புத்திர சோகத்தால் உணர்வு இழந்தனர். செய்வதறியாத அவ்விருவரும் ஒரு மலையில் ஏறி கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து அவ்வாறே செய்தனர். இவ்வளவு நல்ல ஒரு முனிவரும், கற்புக்கரசியான அருந்ததியும் அநியாயமாக சாவதை பூமிதேவியே ஏற்கவில்லை. எனவே கீழே விழுகின்ற இருவரையும், பூமி தேவி தாங்கிப் பிடித்து அவர்களை நிறுத்தி, அவர்கள் செய்வது தவறு