பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 பதினெண் புராணங்கள் கொள்ள, சிவனும் 'அப்படியே ஆகட்டும்’ என்றார். அந்தகனைத் தன் சூலாயுதத்தினின்று விடுவித்து சிவ கணங்களின் தலைவனாக்கினார். ஹிரண்யகசிபுவும் நரசிம்ம அவதாரமும் இக்கதை ஏற்கெனவே விஷ்ணு புராணத்தில் கொடுக்கப் பட்டுள்ளது ஹிரண்யகசிபுவைக் கொன்ற பின்பும், விஷ்ணு தன் நரசிம்ம அவதாரத்தை மாற்றிக் கொள்ளவில்லை. நரசிம்மம் உலகத்தில் அங்கும் இங்கும் ஒடி, எல்லாவற்றையும் அழித்துவிட ஆயத்தமானது. தேவர்கள், பிரம்மனின் உதவி யுடன், மந்தரமலைக்குச் சென்று சிவபிரானை வேண்டினர். சிவனும் தான் அவர்களைக் காப்பாற்றுவதாக உறுதி கூறினார். சிவபெருமான் தன் உடம்பினின்று வீரபத்ரன் என்ற தேவதையைத் தோற்றுவித்தார். சிவபிரானைப் போலவே மூன்று கண்களும், பல ஆயுதங்களைக் கையில் ஏந்தியும் இருந்தார். சிவபெருமானை வணங்கி, என்ன செய்யவேண்டும் எனக் கேட்டான். சிவபெருமானும் அவரிடம் "வீரபத்ரனே ! நரசிம்மம் ஒன்று இங்கு உலவிக் கொண்டு, பெரும் துன்பத்தை விளைவிக்கிறது. அது வேறு யாருமல்ல, விஷ்ணுவேதான். முதலில் நீ சமாதானமாக அந்த அவதாரத்தை விட்டுவிடச் சொல். அவ்வாறு செய்வதற்கு மறுத்தால், கொன்று விடு” எனக் கூறினார். வீரபத்ரன் உடனே, நரசிம்ம அவதாரத்தில் இருந்த விஷ்ணுவிடம், “விஷ்ணுவே! நீரே இந்த உலகத்தைக் காப்பவர். இவ்வுலகைக் காக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் பல அவதாரங்கள் எடுத்துள்ளிர்கள். அவ்வாறு இருக்க, இப்பொழுது ஏன் நரசிம்ம அவதாரத்தை மாற்றிக் கொள்ள மறுக்கிறீர்கள். இது உலகையே அழித்து விடும் அபாயத்தைக் கொடுக்கிறது” என்று அமைதியுடன் கூறினார்.