பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலிங்க புராணம் 479 இதைக் கேட்ட விஷ்ணு கோபத்துடன், “எனக்கு புத்திமதிகள் சொல்வதற்கு நீ யார்? நீ வந்த இடத்திற்கே திரும்பிப் போ, நான் இவ்வுலகை அழிக்கப் போகிறேன். நான் எல்லாவற்றிற்கும் தலைவனாவேன். இவ்வுலகை உண்டாக்கிய பிரம்மா, என்னிலிருந்து பிறந்தவன், ஆதலால் இவ்விடத்தை விட்டு அகன்றுவிடு” என்று வீரபத்ரனிடம் கூறினார். வீரபத்ரன் உடனே, நீ சிவபெருமானை மறந்து விட்டாயா? அவரே அழிக்கும் கடவுள். அவரே எல்லாவற்றிற்கும் முதன்மையானவர். நீ பழைய நிலைக்கு வரவில்லையெனில் சிவன் உன்னை அழித்து விடுவார். நானே வீரபத்திரன். தக்கன் யாகத்தில் உன் தலையை வெட்டியவன் நான் என்பதை மறந்துவிட்டாயா எனக்கூறி தன் உருவத்தை மாற்றிக் கொண்டார். மாறும் பறவையைச் சேர்ந்த வடிவம் (சரப மூர்த்தி) எடுத்து, நரசிம்மத்தைத் தாக்கி வானில் எறிந்தார். கீழே விழுந்தவுடன் மீண்டும், மீண்டும் தூக்கி எறிந்தார். உடனே விஷ்ணு தன் நினைவு வரப்பெற்று சிவபெருமானை நூற்றிஎட்டு பெயர்கள் கூறி, வழிபட்டார். வீரபத்திரனும் நரசிம்மத்தின் தலையை வெட்டி வீழ்த்தினார். விஷ்ணு சிவனுடன் கலந்தார். நரசிம்மத்தின் தோலை ஆடையாக உடுத்திக் கொண்டு, நரசிம்மத்தின் கபாலத்தைத் தன் கபால மாலையோடு இணைத்துக் கழுத்தில் அணிந்து கொண்டார். ஜலந்தரன் கதை : இந்த அரக்கனின் தோற்றம் பற்றி இலிங்க புராணத்தில் சொல்லப்படவில்லை. பத்ம புராணத்தில் இது விரிவாகக் காணப்படுகிறது என்று சொல்கிறார்கள். இந்த ஜலந்தரன், இந்திரன் முதலிய அனைத்து தேவர்களையும் வென்று இறுதியாக விஷ்ணுவிடம் சென்று, உன்னிடம் போர் புரிய வந்துள்ளேன் என்றான். நீண்ட