பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/535

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


506 பதினெண் புராணங்கள் இறந்தவர்களுக்குச் செய்யும் மரியாதை இறந்து போன மூதாதையர்களுக்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என்று மார்க்கண்டேய முனிவரும் வராகமும் விவாதித்தனர். ஏழு தலைமுறைகளை மூதாதையர் என்று சொல்வர். இதில் ஒருவனுக்கு முற்பட்ட நான்கு தலைமுறைகளை பருப் பெருளாகவும், அதற்கு முற்பட்ட மூன்று தலைமுறைகளை நுண்பொருளாகவும் கொண்டு வழிபட வேண்டும். முன்னோர்களுக்குச் சிரார்த்தம் முதலிய கிரியைகள் செய்யும் பொழுது பொருட் செல்வம் என்பதும், பொருள்களைப் படைத்துத்தான் வழிபடவேண்டும் என்பதும் ஒரு பொருட்டே அல்ல. பொருளில்லாதவன் மூதாதையர்களை உளமார நினைத்து, தூய்மையான அன்புடன் கைகளைக் குவித்து வணங்கினால் அதுவே போதுமானது. மூதாதையர்கள், பொருள்களைப் படைத்து மனத்தில் அன்பில்லாமல் சடங்கு களாகச் சிரார்த்தம் முதலிய கிரியைகள் செய்து மகிழ்வதைவிட முதலில் சொன்ன முறையில் அன்போடு செய்யப்படும் வணக்கத்தில் அதிகம் மகிழ்கிறார்கள். இறந்தவர்களை எரிக்கும் சடங்கிற்கு எந்தவிதமான காலக்கட்டுப்பாடும் தேவையில்லை. உத்தராயணம், தட்சணாயணம், எந்த நட்சத்திரம் என்று கவலைப்படத் தேவையில்லை. துர்ஜயாவின் கதை சத்ய யுகத்தில் இக்கதை இடம் பெற்றது. அரசன் சுப்ரதிகாவிற்கும், வித்யுத்பிரபாவிற்கும் மகனாகப் பிறந்தவன் துர்ஜயா. இவர் துர்வாசரிடமிருந்து வரமும், சாபமும் பெற்றவன். அவர் கொடுத்த வரத்தின்படி இவன் யாராலும் வெல்ல முடியாதவன். அவர் கொடுத்த சாபத்தின்படி இவன் கல் போன்ற மனத்தினை உடையவன். ஒரு சமயம் சுவயம்பு