பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 பதினெண் புராணங்கள் சங்கமத்தின் பக்கத்தில் மிகப் பெரிய காடு ஒன்று இருந்தது. முள்ளும் புதரும் கடக்க முடியாமல் நெடிதுயர்ந்து வளர்ந்து இருந்தது. அதன் இடையே பெண் வெள்ளாடு சிக்கிக் கொண்டது. அதைத் தாண்டிப் போக முடியாத நிலையில் பசியால் வருந்தி உயிரை நீத்தது. மஹி சங்கமக் கரையில் வெள்ளாடு உயிர் நீத்தாலும் அதன் உடல் மெள்ள வழுக்கி, மஹறிசகார சங்கமத்தில் விழுந்து விட்டது. ஆனால் ஆட்டின் தலை மட்டும் புதர்கள் நடுவே சிக்கிக் கொண்டதால் தலை பெரும் புண்ணியத்தைப் பெற்று சிங்கள மன்னனின் மகளாகப் பிறந்தது. ஆனால் ஆட்டின் தலை தண்ணிரில் விழாமல் மேலேயே தங்கி விட்டதால் இந்தப் பெண்ணின் தலையும் வெள்ளாட்டின் தலையாகவே இருந்தது. இந்த நுணுக்கத்தை அறிந்து கொண்ட அப்பெண் தன் தந்தையிடம் சொல்லி ஒருமுறை மஹாசாகர சங்கமத்திற்குச் சென்று வரவேண்டு மென்று கேட்டுக் கொண்டாள். அவள் தந்தை ஒரு கப்பலைத் தயார் செய்து அவளை அதில் ஏற்றி கடலைக் கடந்து மஹிசாகர சங்கமத்திற்கு அனுப்பி வைத்தார். தன் உடல் இருந்த இடத்திற்குச் சென்று பார்த்த அப்பெண்ணிற்கு ஆட்டின் தலை வெறும் எலும்புக் கூடாக-தோல் மட்டும் சுருங்கி இருப்பதைக் கண்டாள். அந்தத் தலையை எடுத்துக் கொளுத்தி எலும்பையும், சாம்பலையும் மஹிசாகர சங்கமத்தில் போட்டவுடன் அந்தப் புண்ணியத்தால் இவள் ஆட்டுத்தலை மாறி அழகிய மானுடத் தலை வந்து விட்டது. பல அரசகுமாரர்கள் அவளை மணக்க போட்டி போட்டனர். ஆனால் அவள் அதை ஏற்றுக் கொள்ளாமல் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து வர்கரேஷ்வரா என்ற பெயருடன் ஒரு லிங்கத்தை ஆட்டின் தலை எரித்த இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாள்.