பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பதினெண் புராணங்கள் ஒருவர் சந்தித்ததில்லை. ஆனால் வேதாவைப் பொறுத்தமட்டில் தான் படைக்க வரும்பொழுது சிவலிங்கத்தைச் சுற்றி இறைச்சித் துண்டுகள் கிடப்பதைப் பார்த்தார். முதலில் அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை என்றாலும், நாளாவட்டத்தில் ஒரு வேறுபாட்டைக் கண்டார். தான் படைத்த பொருள்கள் சிதறிக் கிடப்பதையும், இறைச்சித் துண்டுகள் சாப்பிட்டுப் போடப்பட்டவை போல ஒருபுறமாகக் குவிந்திருப்பதைக் கண்டு யாரோ வேடன்தான் இதனைச் செய்திருப்பான் என்பதை அறிந்துகொண்டார். ஆனால் கல்வி அறிவு இல்லாத வேடன் தினந்தோறும் தவறாமல் இறைச்சியைப் படைக்கிறான் என்றால் வேதாவுக்கு அது வியப்பாக இருந்தது. யார் அது என்பதைக் காணவேண்டும் என்பதால் ஒரிடத்தில் மறைவாக இருந்தார். அன்று மிகவும் நேரம் கழித்து பில்லா வந்தான். வழக்கம்போல் இறைச்சியை லிங்கத்திற்கு முன் வைத்தான். லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவபிரான் “பில்லா! நீ ஏன் இன்றைக்கு இவ்வளவு தாமதமாக வந்தாய்? நீ வராமையால் நான் பசியோடு இருந்தேன். வேட்டை சரியாகக் கிடைக்க வில்லையா?” என்று வினவி விட்டு மறைந்தார். பில்லா இறைச்சியைப் படைத்து விட்டு எஞ்சியதை எடுத்துக் கொண்டு போய்விட்டான். சிவபிரான்மேல் பெரும் சினம் கொண்ட வேதா என்ற முனிவர் லிங்கத்தின் எதிரே வந்து நின்று ‘ஐயனே! இந்தப் பாரபட்சம் உனக்கு நியாயமா? இத்தனைக் காலமாக நியமம் தவறாமல் உன்னையே பிரார்த்தனை செய்து பிச்சை எடுக்கும் உணவை உனக்கு நிவேதனம் செய்து உண்டு. வருகிறேன். இதுவரையில் நீ எனக்குக் காட்சி தந்ததே இல்லை. ஆனால் கொலைத் தொழில் புரிந்து பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யும் இந்த வேடனுக்குக் காட்சி தந்தாய். இது என்னால் பொறுக்க முடியவில்லை. இந்தக் கல்லை எடுத்து உன் லிங்கத் திருமேனியை உடைக்கப் போகிறேன்” என்றார். உடனே