பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர்ம புராணம் 653 கூர்ம புராணப்படி சீதை களவாடப்பட்ட கதை வருமாறு : இராவணனுடைய தீய எண்ணங்களை, தெய்வ சக்தியால் முன்னரே அறிந்திருந்த ஜானகி, காட்டில் அமைதியாகக் கண்களை மூடிக் கொண்டு அக்னி தேவனை வழிபடும் எட்டுப் பாடல்களுடன் கூடிய வாகினி மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தாள். இதன் முடிவில் மகேஸ்வரன் ஜோதி வடிவுடன் அங்கே தோன்றி சீதையைப் போலவே ஒரு மாய சீதையை உற்பத்தி செய்து, அங்கே இருக்கச் செய்துவிட்டு, உண்மைச் சீதையை அக்னி சொரூபமான தன்னுள் மறைத்துக் கொண்டார். இராவணன் சந்நியாசியாக வடிவம் கொண்டு சீதையிடம் வருவதற்கு முன்பே இது நடைபெற்று விட்டது. காலன் என்ற பெயருடைய யமனால் தூண்டப்பட்ட இராவணன் சீதையைக் கவர வருகின்றான். (அக்னி புராணக் கதையின்படி இராவணன் தங்கையாகிய துர்ப்பதகை என்ற உத்திரமே இல்லை மற்ற இராமாயணங்களின்படி துர்ப்பதகை தான் இராவணன் மனத்தில் சீதை பற்றிய எண்ணங்களை உருவாக்கினள். ஆனால் கூர்ம புராணப்படி இராவணனைத் துண்டியவன் காவன் என்று அழைக்கப்படும் மனே ஆவான், இராவணன் எடுத்துச் சென்றது சாயா சீதை என்பதை இராவணனோ, இராமனோ, இலக்குவனோ எவரும் அறியமாட்டார்கள். இராவண வதம் முடிந்த பிறகு, மாயா சீதை (சாயா சீதை இராமன் முன் அழைத்து வரப்படுகிறாள். அவளைக் கண்டவுடன் என்ன காரணத்தாலோ, ராமன் மனத்தில் இவள் உண்மையான சீதை அல்லள் என்ற ஐயம் தோன்றுகின்றது. ஆகவேதான் அவளைத் தீக்குளிக்குமாறு சொல்லுகிறான். உண்மைச் சீதையை மறைத்து வைத்திருந்த அக்னிக்கும், இந்த மாயா சீதை இருக்கின்ற வரை உண்மைச் சீதையை வெளிக்