பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/718

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

690 பதினெண் புராணங்கள் இருக்கிறானோ அங்கே செல்வதுதான் முறை. இரண்டாவது காரணம், தர்மதேவன் என்று உனக்குப் பெயர் இருப்பதால் உன்னைப் பின்தொடர்வது சிறப்புடையதாகும்” என்றாள். ஒவ்வொரு வரமாகத் தருகிறேன் என்று யமன் சொல்ல, கண் தெரியாத மாமனாருக்குக் கண் வேண்டும் என்றாள்; பெற்றாள். பிறகு ராஜ்ஜியத்தை ஆளத் தனக்கு நூறு பிள்ளைகள் வேண்டும் என்று வரம் கேட்டாள். கவனக் குறைவால் யமன் அப்படியே ஆகட்டும் என்றான். உடனே சாவித்திரி தர்மராஜனே! இது என்ன ஞாயம்? என் கணவனை நீ பிரித்து எடுத்துச் சென்றுவிட்டால், எனக்கு நூறு பிள்ளைகள் எப்படிப் பிறப்பார்கள்?’ என்று கேட்க, யமன் மனம் மிக மகிழ்ந்து சத்தியவான் உயிரைத் திருப்பிக் கொடுத்து விட்டான். பாற்கடல் கடைதல் தேவர்கட்கும், அசுரர்கட்கும் இடைவிடாமல் போர் நடந்து கொண்டே இருந்தது. இரண்டு பக்கத்திலும் கணக்கற்றவர் இறந்து கொண்டே இருந்தனர். ஆனால் அசுரர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் குருவாகிய சுக்கிராச்சாரிக்குத் தெரிந்த மிருத்யுசஞ்சீவினி மந்திரத்தால், இறந்த அசுரர்கள் எல்லாம் பிழைத்துக் கொள்ள, தேவர்கள் ஜனத்தொகை குறையலாயிற்று. தேவர்கள் சென்று தங்கள் நிலையை பிரம்மனிடம் விளக்கிச் சொல்ல, 'பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்து உண்டால் தேவர்கள் சாகாத்தன்மை பெறுவர் என்று கூற, கடல் கடையும் வேலை தொடங்கிற்று. மந்திரமலை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பு கயிறாகவும் கடையத் தயார் ஆனாலும் மந்திர மலை ஆகிய மத்தை அடியில் இருந்து தாங்க விஷ்ணு உடன்பட்டார். அசுரர்கள் வாசுகி தலைப்பக்கமும் தேவர்கள் அதன் வால்பக்கமும் பிடித்துக்