பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/730

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


702 பதினெண் புராணங்கள் பாசங்கள் ஒட்டிக் கொள்ளும் என்று நினைப்பது தவறு. உலகத்தில் இருந்தபடியே கடமைகளைச் செய்து கொண்டு ஒன்றிலும் பற்று வைக்காமல் வாழ முடியும். அப்படி வாழ்வதற்காகத்தான் உலகம் படைக்கப்பட்டுள்ளது” என்று கூறினர். ருச்சி முன்னோர்களைப் பார்த்து, 'பரம ஏழையாயும், இளமைப் பருவம் இல்லாதவனாகவும் இருக்கும் எனக்கு யார் பெண் தருவார்கள்? என்று கேட்க, 'பிரம்மனை நோக்கித் தவம் செய்க என்று முன்னோர் கூறினர். அதன்படியே ருச்சி, நூறு ஆண்டுகள் பிரம்மனை நோக்கித் தவம் செய்தான். பிரம்மன் தோன்றி, பிரம்மலோச்சா என்ற அப்ஸரஸின் மகளை மணந்து கொள்ளுமாறு பணித்தார். அக்கட்டளைப்படி மானினி என்ற பெண்ணை மணந்து வாழ்ந்தான். அரசனும் கடமைகளும் ஒர் அரசன் என்பவன் தன் பகைவர்களை வென்று, குடிமக்கள் நலமுடன் வாழ வழிவகுக்க வேண்டும். மாலை கட்டுபவன் செடி, கொடிகள், மரங்கள் என்பவற்றில் இருந்து தனக்கு வேண்டுமான பூக்களைப் பறித்துக் கொள்கிறானே தவிர, அச்செடி கொடி மரங்களை வேரோடு பிடுங்குவதில்லை. அதேபோல, அரசன் நாட்டைக் காப்பதற்குத் தேவையான பொருளை வரிமூலம் வசூல் செய்யலாம். ஆனால் அந்த வரிச்சுமை வரி செலுத்துவோரை ஆண்டிகளாக ஆக்கிவிடக் கூடாது. பூப்பறிக்கும் ஒருவன் அச்செடி கொடிகளுக்கு நீர் விட்டுக் காப்பது போல அரசனும் வரிப்பணம் செலுத்தும் குடிமக்கள் நலமுடன் வாழ தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.