பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/731

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருட புராணம் 703 குடிமக்களிடமிருந்து வசூல் செய்யும் வரிப்பணத்தை ஆடம்பரம், கேளிக்கை என்பவற்றில் செலவிடாது, பயனுடைய வழியில் செலவு செய்ய வேண்டும். அரசன் குடிமக்களைத் தன் குழந்தைகள் போலப் பாதுகாக்க வேண்டும். அரசன் புரோகிதர்கள், அமைச்சர்கள், பணியாளர்கள் என்பவர்களை நியமிக்கும் பொழுது மிக்க கவனத்துடன் இருக்க வேண்டும். நன்கு ஆராய்ந்து, ஒவ்வொருடைய தகுதி, பண்பு, விசுவாசம் என்பவற்றை ஆராய்ந்தே இவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும். பிரச்சினைகள், இடையூறுகள் வரும் பொழுது மன்னன் மனம் கலங்கிவிடக் கூடாது. அதற்கெதிராக, மனத் துணிவோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். இராகுவால் பிடிக்கப்பட்ட சந்திரன் மறுபடியும் அதிலிருந்து விடுதலை அடைவது போல், அரசனுக்கு வரும் இடையூறு களையும், பிரச்சினைகளையும் தக்க முறையில் சந்தித்தால் நீங்கிவிடும். பணியாளர்களை அன்புடன் நடத்தாமல் எப்பொழுதும் ஏசிக்கொண்டே இருந்தால் அவர்கள் மனம் ஒடிந்து பணிகளைச் செவ்வனே செய்யமாட்டார்கள். ஒர் அரசனிடம் ஆறுவகையான இயல்புகள் எதிர் பார்க்கப்படுகின்றன. அவையாவன: ஊக்கமுடைமை, மனத்தைரியம், பொறுமை, அறிவுடைமை, வண்மை, உடல் வலிமை என்பவையாம். அமைச்சர்கள், மருத்துவர்கள் என்பவர்களை நியமனம் செய்யும் பொழுது, மிக்க கவனத்துடன் அவர்களுடைய அரச விசுவாசத்தைப் பல வழிகளில் ஆராய்ந்து, சோதனை செய்து அதன் பின்னரே அவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும். மருத்துவம் தன்வந்திரி, சுஷ்ருதா என்ற முனிவருக்கு ஆயுர்வேதங் களைக் கற்றுத் தந்தது பற்றி, ஆயுர்வேத நூல்கள் விரிவாகப்