பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/748

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


720 பதினெண் புராணங்கள் பூமி-தோல், எலும்பு, நரம்புகள், சதை உரோமம் என்பவற்றில் கலந்துள்ளது. நீர்- எச்சில், இரத்தம், எலும்பு, சவ்வு என்பவற்றிலும், நெருப்பு- பசி, தூக்கம், தாகம், களைப்பு, சுறுசுறுப்பு என்பவற்றிலும், காற்று- கோபம், துவேஷம், அடக்கம், பயம், அறியாமை என்பவற்றிலும், ஆகாயம்- நவ துவாரங்கள், ஈர்ப்பு, கேட்கும் தன்மை, மனம் என்பவற்றிலும் கலந்துள்ளது. புலன்கள் ஐந்து வகைப்படும். சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் ஆகியவை ஐம்புலன்கள் ஆகும். இந்தப் புலன்களுக் குரிய பொறிகள் வாய், கண், உடல், காது, மூக்கு என்பவை ஆகும். செயல்படும் கருவிகள், கை, கால், நா முதலியவை. பத்து வகை நாடிகள் உடம்பில் உள்ளன. அவையாவன: இட, பிங்கல சுஷ்மன, காந்தாரி, ஹந்தி, ஜிஹ்வா, புஷாயஷா, அலம்புஷா, குஹீ. சங்கினி என்பவையாம். பத்துவகை வாயுக்கள் உடலில் உள்ளன- அபானம், சமான, உதானம், வியானம், நாக, கூர்ம, கிரிகர, தேவதத்தா, தனஞ்செயன் முதலியவை ஆகும். மனிதனின் உடலில் மூன்றரைக் கோடி ரோமங்கள் உள்ளன. தலையில் மூன்று லட்சம் ரோமங்கள் உள்ளன. முப்பத்திரண்டு பற்களும், இருபது நகங்களும் உள்ளன. ஆயிரம் பலம் (அன்றைய அளவு முறை) எடை சதை, நூறு பலம் எடை ரத்தம், பத்து பலம் எடை கொழுப்பு, பத்து பலம் எடை தோல், பன்னிரண்டு பலம் எடை எலும்பு ஜவ்வு உள்ளதென அறிஞர் கூறுவர். மனித உடலுக்கும், பூமிக்கும் ஒருவகை ஒற்றுமை உள்ளது. இடுப்பின் கீழே உள்ள பகுதி பாதாள லோகத்துடனும், இடுப்பிற்கு மேற்பட்ட பகுதி பூமிக்கு மேலே உள்ள உலகங் களுடனும் தொடர்பு கொண்டுள்ளது. குதிகால்கள் தாள லோகத்துடனும், கணுக்கால்கள் விதல லோகத்துடனும்,