பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்ம புராணம் 49 சுரனிடம் கொடுத்துவிட்டான். இந்த உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க சற்றும் விரும்பாத இந்திரன், காலம் பார்த்து விருத்ராசுரனை அழிக்க நினைத்தான். இதனிடையில் நந்தன கானகம் என்ற இடத்தில் உலாவிக் கொண்டிருந்த விருத்ரா சுரன் எதிரே ரம்பை என்ற தேவ கன்னிகை தோன்றினாள். அவள்மேல் ஆசைப்பட்ட விருத்ரன் தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினான். தான் என்ன சொன்னாலும் அவன் கேட்க வேண்டும், அதன்படி நடக்க வேண்டும் என்று ஒரு கட்டளை விதித்தாள் ரம்பா. விருத்ராசுரன் அதற்கு உடன்படவே ரம்பா மணம் செய்து கொண்டாள். சில காலம் கழித்து ரம்பா விருத்ராசுரனைப் பார்த்து "இந்த அருமையான திராட்சை ரசத்தை அருந்துங்கள்” என்று கூறினாள். விருத்ரா சுரன், காசிபன் என்ற பிராமணன் மகன் நான். மது அருந்துவது பாவம்' என்று கூறினான். தனக்காக மதுவை அருந்தியே தீர வேண்டும் என்று ரம்பா பிடிவாதம் செய்ததால், விருத்ராசுரன் மதுவை அருந்தி மயக்கத்தில் வீழ்ந்து விட்டான். இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திரன், விருத்ரனைக் கொலை செய்து விட்டான். ஒரு பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்திதோஷம் இந்திரனைப் பற்றிக் கொண்டது. - இதனை அடுத்துப் பத்ம புராணத்தில் வெனாவின் கதையும் பிருதுவின் கதையும் வருகின்றன. இவை ஏற்கெனவே பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளன.) ஆண், பெண் பன்றிகளின் கதை இஷ்வாகு மன்னன் சுதேவா என்ற பெண்ணை மணந்து அயோத்தியை ஆண்டு வந்தான். ஒருமுறை அவன் வேட்டைக்குப் புறப்பட்டபோது அவன் மனைவி சுதேவாவும் உடன் சென்றாள். பல மிருகங்களை வேட்டையாடிவிட்டு ւI.ւկ.-4