பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 பதினெண் புராணங்கள் மதித்து நடத்தி வந்தாள். மனைவியின் கொடுமையைத் தாங்க முடியாத சிவசர்மா ஒருவருக்கும் சொல்லாமல் ஒருநாள் வீட்டை விட்டே போய்விட்டான். வசுதத்தாவின் மனைவி தன் மகளை செல்லம் கொடுத்துக் கெடுத்ததையும், அந்த மகள் கணவனைத் தூசாக மதித்து நடத்தியதையும் எடுத்துக் கூறி, இப்படிப்பட்ட பெண் வீட்டில் இருப்பதில் யாருக்கும் நன்மை யில்லை. இவளை வீட்டைவிட்டு அனுப்பி விடுக! என்று கூறினாள். மனைவி சொல்லில் இருக்கும் உண்மையைப் புரிந்துகொண்ட வசுதத்தா தன் செல்ல மகளை வீட்டை விட்டுத் துரத்தி விட்டான். ஊர் ஊராகச் சென்று, பிச்சை எடுத்து வயிறு வளர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்த சுதேவா கடைசியாக ஒரு ராஜ்ஜியத்தில் புகுந்து மிகுந்த செல்வம் உடைய ஒருவன் வீட்டில் பிச்சை கேட்டாள். அந்த வீட்டுக் காரன் தன் மனைவியை அழைத்து, "மங்களா! யாரோ பசி என்று கேட்கிறார்கள், வேண்டுமான உணவினைப் படைப்பா யாக!” என்று கூறினான். மங்களா வெளியே வந்து பார்த்துப் பசியுடன் கூடிய மெல்லிய உடலை உள்ளவளை உள்ளே அழைத்து அமரச் செய்து, இனிப்புப் பண்டங்கள் நிறையக் கொடுத்து உண்ணச் செய்தாள். இப் பெண் உண்டு கொண் டிருக்கும்போது சிவசர்மா இவளைப் பார்த்து, நீ யார்? ஏன் இந்த நிலைமைக்கு வந்தாய்? என்று கேட்டான். அவன் குரலிலிருந்து அவன் யார் என்பதைப் புரிந்து கொண்ட சுதேவா தலை குனிந்து கொண்டாள். இப்பொழுது அவளை அறிந்து கொண்ட சிவசர்மா, மங்களாவிடம் நடந்ததைக் கூறி "இவள் என் மனைவி. இவளை நன்றாகப் பாதுகாப்பாயாக!” என்று கூறினான். மங்களாவும் அப்படியே செய்தாள் என்றாலும், தான் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி சுதேவா உயிரை விட்டுவிட்டாள். நரகலோகத்தில் பல தண்டனை களையும் அனுபவித்துப் பிறகு கரையான், பூச்சி வாழ்க்கை