பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்ம புராணம் 53 என்பவற்றில் பிறந்து வாழ்ந்து படிப்படியாக முன்னேறி இறுதியாகச் சுதேவா ஒரு பெண் பன்றியாகப் பிறந்தாள். அந்தப் பெண் பன்றி வேறுயாருமில்லை, நான்தான்” என்று இஷ்வாகுவின் மனைவிக்குப் பெண்பன்றி தன் பூர்வ வரலாற்றைக் கூறிப் பெண் தெய்வ வடிவை எடுத்துக் கொண்டது. உடனே தேவ கணங்கள் வந்து இந்த உயிரை விமானத்தில் ஏற்றிச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் சென்றனர். கிரிகலா - சுகலா கதை ஒரு காலத்தில் வாரணாசியில் கிரிகலா என்ற வைசியன் வாழ்ந்து வந்தான். திடீரென்று தீர்த்த யாத்திரை போக வேண்டுமென்று மனைவியிடம் சொன்னான். சுகலா என்ற அவன் மனைவி தானும் உடன் வருவேன் என்று அடம் பிடித்தாள். வழியில் எத்தனையோ இடையூறுகள் ஏற்படு மென்று அஞ்சிய கிரிகலா அவளிடம் சொல்லாமலே யாத்திரைக்குப் புறப்பட்டு விட்டான். கணவனிடம் மிக்க அன்பு கொண்ட சுகலா உணவு, உறக்கம் என்பதை விட்டுத் தரையில் கிடந்து உறங்கத் தொடங்கினாள். அவளது உறவினர்கள் அவளிடம் "உன் கணவன் தீர்த்த யாத்திரைக்குத்தானே போயிருக்கிறார். நீ ஏன் இப்படி மனத்தைக் குழப்பிக் கொண்டு, உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்?’ என்று கூறினர். அவர்கள் கூறியதை ஏற்காத சுகலா என்னிடம் சொல்லாமல் போனதே என்னை ஒதுக்கி வைத்தது போலத் தான். ஆகவே நான் இந்த விரதங்களை அனுஷ்டிப்பது நியாயம்தான் என்று வாதாடினாள். ஒருமுறை இந்திரன் பணியாளன் ஒருவன் வந்து, "அம்மா! உன் கணவன் போய் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் எங்கே போனான் என்று யாருக்கும் தெரியவில்லை.