பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பத்ம புராணம் 67 அழுகையில் மலர்ந்த மலர்கள் : ஆலமரத்தில் இருந்த குஞ்சலா என்ற தந்தைக் கிளி. கபிஞ்சலா என்ற நான்காவது மகனைப் பார்த்து, மகனே! நீ எங்கேயிருந்து வருகிறாய்? ஏதாவது அதிசயத்தைப் பார்த்தாயா என்றது. கபிஞ்சலா : ஆம் தந்தையே, நான் தினமும் கைலாச மலைக்குச் செல்கிறேன். கைலாயம் மிக அற்புதமான அழகுடன் இயற்கை எழில் கொஞ்சும் நிலையில் உள்ளது. கங்கை முதல் நூற்றுக்கணக்கான புண்ணிய நதிகள் அங்கே ஒடுகின்றன. கைலாயத்தின் ஒரு புறத்தில் ஒரு பெரிய ஏரியில் நீர் நிறைந்துள்ளது. அந்த ஏரியில் மலர்கள் பூத்துக் குலுங்கு கின்றன. அதன் ஒருபுறத்தில் ஒரு கற்பாறை உள்ளது. அதன் மேல் ஒரு பெண் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாள். அவள் கண்ணிர் ஏரியில் வந்து விழுந்தவுடன் தாமரை மலர் போன்ற ஒரு மலர் பூக்கின்றது. அந்தப் பாறையின் பக்கத்தில் சிவனுடைய விக்கிரகம் உள்ளது. அந்த மலர்ந்த மலரை ஒரு தவசி எடுத்துச் சிவனுக்குச் சாத்துகிறார். பல மலர்களைச் சாத்திய பிறகு பாடுகிறார்; நடனம் ஆடுகிறார். பிறகு ஓவென்று கதறி அழுகிறார். அவர் உடம்பு வெறும் எலும்புக் கூடாகத் தான் இருக்கிறது. காய்ந்து போன சருகுகளையே அவர் உண்கிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தப் பெண் ஏன் அழுகிறாள்? அவள் கண்ணிர் ஏன் மலராக மலருகிறது? அந்தத் தவசி ஏன் அழவேண்டும்? இதன் விளக்கத்தை அறிய வேண்டுகிறேன். தந்தை : மகனே கபிஞ்சலா! கைலாயத்தில் மிக அற்புதமான ஒரு நந்தவனம் உண்டு. மிக அற்புதமான மரங்கள் அங்கே பூத்துக் குலுங்கும். ஒருநாள் சிவனும், பார்வதியும் அதைப் பார்க்க வந்தனர். எல்லா மரங்களையும் பார்த்து மகிழ்ந்து வந்த பார்வதி ஒரு குறிப்பிட்ட மரத்தைப் பார்த்து