பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்வாங்க கருதுகின்றதோ? என்ற எண்ணங்கள் எழவே, களங்காய்க்கண்ணியானை அணுகினர். அந்நிலையில், நார்முடிச்சேரல், தன் நாற்படைத்தலைவரை அழைத்து, அவர்பால் ஏதேதோ ஆணைகள் போக்கினன். அவ்வாணையேற்றுவிரைந்தார்கள் படைத்தலைவர்கள். உடனே, பாடிகொண்டிருந்த படை, பற்பல அணிகளாகப், பல்வேறுதிசைகளில் பிரிவதும் கூடுவதுமாகிய நிகழ்ச்சிகள், விரைந்து நடை பெறலாயின. எல்லாம் சிறிது நாழிகையே. இறுதியில் ஒரு புதிய படை வகுப்பு:உருப்பெற்று விட்டது. அந்நிலையில் அது ஒர் அரண்போலவே காட்சி அளித்தது எனக் கூறுவது பொருந்தாது. அ ர ணு க வே மாறி விட்டது. வரிசை வரிசையாக நின்ற வாள்வீரர் அணிவகுப்பு அரண் மதிலாக, வான்நோக்கி உயர்ந்த வேல்ஏந்திய வீரர்கள், வாள்வீரரை வளைத்து நின்று, மதிலைச் சூழ வளர்த்துவிட்ட காவற்காடாக, விரைந்து பாயும் அம்பேவவல்ல வில்லாளர்போலும் வேறுபல படையாளர்கள், வாள்வீரர் வரிசைக்கும், வேல்வீரர் வரிசைக்கும் இடையே இடம்பெற்று, மதிலுக்கும், காவற்காட்டிற்கும் , இடையேகிடந்து, வாள் போல் மின்னும் வாளைமுதலாம் மீன்கள்வழங்கும் அகழியாய் அமைய, அவ்வாறு அணிவகுத்து நின்ற அந்நாற்படையை ஊடறுத்து உட்புகுவது, கால் அற்ற காற்றுஒன்றிற்கு மட்டுந்தான்் இயலுமேயல்லது, கால்கொண்டு உலாவும் உயிர்எதற்கும் இயலாத, அத்துணைச்சிறந்த அமைப்பினைக் கொண்ட அரணுக மாறிவிட்டது. பெரிய அரண்போலும் அமைப். புடையதாகி, விட்டது தம்நாற்படை அணிவகுப்பு, என்பதைக் கண்டு. கொண்டதும், படைத்தலைவர் போர்முரசை முழக்கி விட்டார்கள். - -

படைத்தலைவர் யாது கூறுகின்றனர்? அவர் ஆணை ஏற்ற படைவீரர் யாது புரிகின்றனர்? என்பதறியாது, திகைத்து

34