பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என, நார்முடிச்சேரலின் போர்ப்புகழ் பாடும் பெருமையுடையதாதல் கண்டு, அப்பாட்டிற்கு அதுவே பெயராக அமைத்துச்சென்ற ஆன்ருேர்தம் அறிவுநலம் கண்டு பாராட்டுவோமாக.

25 'புரைசால் மைந்த ! நீ ஒப்பன்மாறே,

உரை சான்றனவால் பெருமை, நின் வென்றி, இருங்களிற்று யானை இலங்குவான் மருப்பொடு, நெடுந்தேர்த் திகிரி தாய வியன்களத்து

5 அளகுடைச் சேவல்கிளே புகாஆரத்,

தளதுமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை அந்திமாலை விசும்பு கண்டன்ன செஞ்சுடர் கொண்ட குருதி மன்றத்துப் போய் ஆடும், வெல்போர்

10 வீயாயானர் நின் வயிஞனே’’,

துறை : வாகைத் துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு: செந்துாக்கு பெயர்: மெய்யாடு பறந்தலை

மைந்த ! நீ ஒம்பன்மாறு, வெல்போர் வீயாயானர் நின் வயின், பெருமை வென்றி உரைசான்றன, என வினை முடிவு கொள்க.

உரை: புரைசால் மைந்த = உயர்ச்சி பலவும் ஒருங்கே அமைந்த உரமுடையோய்! நீ ஓம்பன்மாறு = படை அழிவு நேராவாறு நின்நாற்படையைக் காத்து நிற்பதால். இருங்களிற்று யானை = பெரிய ஆண்யானைகளின், இலங்குவான் மருப்பொடு = ஒளிவீசும் வெண்ணிறத் தந்தங்களோடு.

46