பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்று பகையரசர்களின் பற்றற்கரிய பேரரண்களையெல்லாம் தம்கோடுகொண்டு தாக்கித் தகர்த்து, அந்நாட்டு ஆட்சி உரிமையைத் தம் நாட்டு அ ர ச னி ன் உரிமையாக்கும் பெருமையைால், பொற்பூண் பூண்ட வெண்கோடுகளைக் கொண்ட வேழங்களால் மலிந்திருந்தது அவன் படை, சிவந்த பிடரியும் விரைந்த செலவும் உடைய பரிப்படையால் பெருமை பெற்ருன் அப்பேரரசன். களம்பலகண்ட காளையராம் என்பதை உணர்த்தக் கட்டிய பொற்கழலும், கைவேலைப்பாடு மிகத்தொடுத்த கண்ணியும் உடையராகிய, சேரநாட்டு மறவர்களைச் சிறக்கப் பெற்றிருந்தான்். நாடு கண்டும், நாட்டை வளமுடையதாக்கியும், நாட்டையும் வளத்தையும் காக்கவல்ல நாற்படையை நல்லமுறையில் அமைத்தும், செய்ய வேண்டும் கடமைகளைச் சிறப்புறச் செய்து முடித்த களங்காய்க்கண்ணியான், பின்னர் வாழ்வின் பயன்காண முனைந்தான்்; அவ்வாறு முனைந்தவன், ஈதல் இசைபட வாழ்தல், அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' என்ற உலகியல் உண்மை உணர்ந்து, பரிசிலர் ஒவ்வொருவரும் தம்மை வாழ்விக்கும் விழுநிதியாகத் தன்னை மதிக்குமாறு, அவர்க்கு வேண்டும்பொருள்களை, வே ண் டு ந் தோறும் வேண்டுமளவு வழங்கவல்ல வள்ளலாய்த் திகழ்ந்தான்். தன் நாளோலக்கப் பேரவை, பகைநாட்டுத் தூதுவர் போலும் அரசியல் தொடர்புடையாரைப் பெருது, பாணர், பொருநர் போல்வார்க்கே இடம் அளிக்கும் பெருமையுடையதாக மாற்றி அ ைமத் தான்். இவ்வாறு இரவலர் போலும் தொடர்பிலாதாரிடத்தெல்லாம் பே ர ருள் உடையணுகத் திகழ்ந்த அவன், மனைவி மக்கள் போலும் தொடர்புடையார் மாட்டுக் கொள்ளலாம் அன்புடைமையிலும் குறை செய்தா. னல்லன்; மனையும் மக்களும் ஆகிய அவன் உரிமைச் சுற்றத்தார் உள்ளம், பேரின்பம்கொள்ள அவ்வுள்ள நிறைவை உணர்த்தவல்ல உருவு நலனும் பெற்றுப் பெரு

53