பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வீரர்காள் வேந்தன் போர் வேட்கை உடையயிைனன்; ஆகவே, நீவிர், இந்நிலையே போர்க்களம் புகுமின்!” எனக் கூறிப் பணிக்கும்பணை யென்று கூறிய பாநலம் அமையப் பெற்றமையால், ஏவல் வியன்பணை என்ற அவ்வினிய .ெ த | ட ரே, இப்பாவிற்குப் பெயராகச் சூட்டப்பட்டுள்ள பெருமை பாராட்டற்குரித்து.

29. பிறர்க்கென வாழ்தி நீ யாகன்மாறே;

எமக்குஇல் என்னுர் நின் மறங்கூறு குழாத்தர்; துப்புத்துறைபோகிய வெப்புடைத் தும்பைக், கறுத்த தெவ்வர் கடிமுனை அலற 5 எடுத்து எறிந்து இரங்கும் ஏவல்வியன்பணை . உரும்என அதிர்பட்டு முழங்கிச் செருமிக்கு

அடங்கார் ஆரரண் வாடச் செல்லும் காலன் அனைய கடுஞ்சின முன்ப! வாலிதின், நூலின் இழையா நுண்மயிர் இழைய 10 பொறித்த போலும் புள்ளி எருத்தின் .

புன்புறப் புறவின் கணநிரை அலற அலந்தலை வேலத்து உலவை அஞ்சினைச் சிலம்பி கோலிய அலங்கற் போர்வையின் இலங்குமணி மிடைந்த பசும்பொன் படலத்து 15 அவிர் இழை தை.இ மின்உமிழ்பு இலங்கச்

சீர்மிகுமுத்தம் தை இய - நார்முடிச் சேரல்! நின் போர்நிழல் புகன்றே',

துறை : வாகை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்துாக்கு பெயர் : ஏவல் வியன் பணை

7]